விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியலான “அழகிய தமிழ் மகன்” சீரியலில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் சித்தார்த் குமாரன்.  நமது பக்கத்து வீட்டு பையன் என சொல்லும் அளவிற்கு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி கடந்த 14 ஆண்டுகளாய் தொடர்ந்து நடிகராக சின்னத்திரையின் வாயிலாகவும் வெள்ளித்திரையின் வாயிலாகவும் மக்களை மகிழ்வித்து வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியின் “என் பெயர் மீனாட்சி”, “ஆபீஸ்”, “சரவணன் மீனாட்சி”, “ரெக்க கட்டி பறக்குது மனசு”, “தேன்மொழி பி ஏ” உள்ளிட்ட ரசிகர்களின் ஃபேவரட் - சூப்பர் ஹிட் சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்திலும் கதாநாயகனாகவும் கலக்கிய நடிகர் சித்தார்த் குமாரன், ஜோடி நம்பர் ஒன், டான்ஸ் ஜோடி டான்ஸ், அச்சம் தவிர் உள்ளிட்ட பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று அசத்தியவர்.

தற்போது விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "ஈரமான ரோஜாவே 2" சீரியலில் நடிகை கேபியுடன் இணைந்து சித்தார்த் குமாரன் நடித்து வருகிறார். முன்னதாக “அகடு” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக களமிறங்கி இருக்கும் நடிகர் சித்தார்த் குமாரன், நடித்திருக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் விரைவில் ரிலீஸாக காத்திருக்கின்றன. இதனிடையே தற்போது நடிகர் சித்தார்த் குமாரன் இன்று டிசம்பர் 29ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தமிழகம் மட்டுமல்லாது கடல் கடந்து உலகெங்கும் பரவி இருக்கும் தமிழ் மக்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்த நடிகர் சித்தார்த் குமாரனுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் சித்தார்த் குமாரனின் பிறந்தநாளுக்கு கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.