தன்னிகரற்ற நட்சத்திர நடிகராக அனைத்து தரப்பு ரசிகர்களின் இதயங்களிலும் தனக்கென தனி சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தின் நடிக்கிறார். முன்னதாக நேற்று ஜனவரி 2ம் தேதி தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான விக்ரம் திரைப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் இணைந்துள்ள தளபதி 67 திரைப்படம் இந்திய சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் தளபதி 67 படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வாரிசு திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு வெளியாகும் என தெரிகிறது.

முன்னதாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியிட வரும் பொங்கல் வெளியீடாக ரிலீசாகிறது. அதே பொங்கல் வெளியீடாக அஜித்குமாரின் துணிவு திரைப்படமும் ரிலீஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அஜித்குமாரின் துணிவு பட ட்ரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தளபதி விஜயின் ட்ரெய்லருக்காக விஜய் ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் ரசிகர்கள் “வா தலைவா” என ஆர்ப்பரிக்கும் விதமாக தற்போது தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை ஜனவரி 4-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் எனவும் வாரிசு திரைப்படத்திற்கு சென்சாரில் "U" சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அட்டகாசமான அந்த அறிவிப்பு இதோ...

#VaaThalaivaa it’s time for #VarisuTrailer 🔥
Releasing Tomorrow at 5 PM on @SunTV YouTube channel 💥

See ‘U’ soon nanba 😁#VarisuGetsCleanU#Thalapathy @actorvijay sir @directorvamshi @MusicThaman @iamRashmika @7screenstudio @TSeries #Varisu #VarisuPongal pic.twitter.com/OAm0gBhV48

— Sri Venkateswara Creations (@SVC_official) January 3, 2023