நேர்க்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணியில் உருவான திரைப்படம் துணிவு. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். முன்னதாக படத்தின் பாடல்கள் வெளியாகி பெரிதும்  வரவேற்கபட்டு வருகிறது. மேலும் அப்படத்தின் ட்ரைலர் வெளியாகி 39 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பெரும் வரவேற்பு பெற்றுக்கொண்டிருகின்றன. துணிவு படத்தில் அஜித்தின் மாறுபட்ட தோற்றத்தில் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.வங்கி கொள்ளையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்தை ரசிகர்கள் பெருவாரியாக எதிர்பார்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் அப்படத்திற்கான விளம்பர பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. படவெளியீட்டுக்கு சில நாட்களே உள்ள நிலையில் உலகெங்கிலும் அஜித் ரசிகர்கள் பல இடங்களிலும் வலைதளங்களிலும் தங்கள் கொண்டாட்டங்களையும் மகிழ்ச்சியையும் பல வழிகளில் தெரிவித்து வருகின்றனர்.  

இதற்கிடையே துணிவு படத்தை கொண்டாடும் விதமாக மலேசியாவில் 'மாலிக் ஸ்ட்ரீம் நிறுவனம்'  சார்பில் அஜித் ரசிகர்களை ஒன்று திரட்டி சொகுசு கார்கள், விலையுயர்ந்த கார்களின் அணிவகுப்பை ஏற்பாடு செய்திருந்தது. மேலும் அணிவகுப்பில் துணிவு போஸ்டர் இடம்பெற்ற பெரிய ட்ரக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடு செய்யப்பட்ட கார், ட்ரக்குகள் கொண்ட இந்த அணிவகுப்பு மலேசியாவின் பெரும்பாலான பகுதியில் ஊர்வலமாக செல்லப்பட்டது.

மேலும் ‘துணிவு சமூக நல வாகன அணிவகுப்பு’ என்ற பெயரில் மலேசியா பெந்தோங்கில் அமைந்துள்ள தேசிய மாநில தமிழ் பள்ளியில் மாணவர்கள் மற்றும் பள்ளிக்கு  தேவையான ஆடைகள் மற்றும் உபகரணங்களை வழங்கினர். மேலும் மலேசியா மதிப்பில் 50,000 ஆர்.எம்  பள்ளியை சீரமைக்க நன்கொடையாக வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வு குறித்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி அஜித் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

Thunivu Charity Convoy happening successfully on 31st December 2022. Thank you to everyone who made this event a successful one.#ThunivuByMSC #malikstreams #Thunivu #OperationThunivu #Ajithkumar #ManjuWarrier #HVinoth #ZeeStudios #BayviewProjects #LycaProductions #nogutsnoglory pic.twitter.com/WCGNbJ627O

— Malik Streams Corporation (@malikstreams) January 1, 2023

மேலும் சமீபத்தில் துபாயில் துணிவு பட பேனரை ஏந்தி வானில் பறந்தபடி ஸ்கை டைவிங் செய்த வீடியோ வைரலனாது குறிப்பிடத்தக்கது.