சைக்கிளில் வந்து வாக்களித்த விஜய் ! ட்ரெண்டிங் வீடியோ
By Aravind Selvam | Galatta | April 06, 2021 10:21 AM IST
தமிழகத்தில் 2021ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெறுகிறது.மக்கள் தங்கள் ஓட்டுக்களை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.பலரும் தங்கள் வாக்குகளை விறுவிறுப்பாக செலுத்தி வருகின்றனர்.
மக்களுடன் இணைந்து அரசியல் பிரமுகர்கள்,சினிமா நட்சத்திரங்கள் என்று பலரும் தங்கள் வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர்.தற்போது நிலவி வரும் கொரோனா சூழல் காரணமாக வாக்காளர்கள் மாஸ்க் போன்ற பாதுகாப்பு உபகாரணங்களோடு வந்து வாக்களித்து வருகின்றனர்.
திரை நட்சத்திரங்கள் தங்கள் வாக்குகளை விறுவிறுப்பாக செலுத்தி வருகின்றனர்.தற்போது தமிழகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் தனது வாக்கினை நீலாங்கரையில் அமைந்துள்ள ஒரு பள்ளியில் செலுத்தியுள்ளார்.
தளபதி விஜய் இந்த முறை சைக்கிளில் தனது வீட்டில் இருந்து வந்து வாக்களித்துள்ளார்.இந்த வீடியோக்களும்,புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.தளபதி விஜய் சைக்கிளில் வந்தது குறித்து பல விவாதங்களும் சமூகவலைத்தளங்களில் நடைபெற்று வருகின்றன.
#ThalapathyVijay arrives in cycle to cast his vote in #TamilNaduElections 👍#Thalapathy #Vijay @actorvijay pic.twitter.com/Y0MfcbNUSn
— Suresh Kondi (@V6_Suresh) April 6, 2021
Thalaivaa 😍❤️ @actorvijay pic.twitter.com/qpiCmtQexv
— Actor Vijay Universe (@ActorVijayUniv) April 6, 2021
Ithu Namma Listlaye Illaye!🔥#NoExcusesDay #TNElections2021 pic.twitter.com/yrz5Fyd6Ia
— Lokesh (@LokeshJey) April 6, 2021
Thalapathy and his love towards his fans is still a non ending story 💙💙 can you think of any other actor in this place 🤔 ?? #Master @actorvijay #Cycle pic.twitter.com/38FMrCvOQg
— 𝑺𝒂𝒏𝒌𝒂𝒓 𝑴𝑺✨ (@SankarMahhaRajh) April 6, 2021