தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை வெளியான திரைப்படங்களுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 4-ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்,சின்னத்திரை விருதுகள், தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளது. 

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளின் சிறந்த திரைப்படத்திற்கான முதல் 3 இடங்களை பிடித்த படங்கள், 2009 ஆம் ஆண்டில் பசங்க, மாயாண்டி குடும்பத்தார், அச்சமுண்டு அச்சமுண்டு, 2010ஆம் ஆண்டில் மைனா, களவாணி, புத்ரன் மற்றும் நம்ம கிராமம், 2011 ஆம் ஆண்டில் வாகைசூடவா, தெய்வத்திருமகள், உச்சிதனை முகர்ந்தால், மெரினா (சிறப்பு), 2012 ஆம் ஆண்டு வழக்கு எண் 18/9, சாட்டை, தோனி, கும்கி (சிறப்பு), 2013ஆம் ஆண்டில் ராமானுஜன், தங்கமீன்கள், பண்ணையாரும் பத்மினியும், ஆள் (சிறப்பு),  2014ஆம் ஆண்டில் குற்றம் கடிதல், கோலி சோடா, நிமிர்ந்து நில், காக்கா முட்டை (சிறப்பு) ஆகிய திரைப்படங்கள் தமிழக அரசு திரைப்பட விருதுகளை கைப்பற்றியுள்ளன.

2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான திரைப்படங்களுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகர், நடிகைகளாக கரண், பத்மபிரியா, பிரசன்னா, அஞ்சலி, பிரகாஷ்ராஜ், சீயான் விக்ரம், அமலாபால், விமல், இனியா, சிவகார்த்திகேயன், அனுஷ்கா, ஜீவா, விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன், சமந்தா, விஜய் சேதுபதி, ஆர்யா, நயன்தாரா, சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபிசிம்ஹா, கயல் ஆனந்தி உள்ளிட்ட நடிகர்கள் விருதுகளை பெறவுள்ளனர்.

மேலும் சிறந்த இயக்குனர்களாக வசந்தபாலன் - அங்காடித்தெரு, பிரபுசாலமன் - மைனா, A.L.விஜய் - தெய்வத்திருமகள், பாலாஜி சக்திவேல் - வழக்கு எண் 18/9, ராம் - தங்க மீன்கள், ராகவன் - மஞ்சப்பை ஆகியோர் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளில் விருதுகளை கைப்பற்றியுள்ளனர். தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் முழு பட்டியல் இதோ…
tamilnadu govt film awards for 2009 to 2014 announced tamilnadu govt film awards for 2009 to 2014 announced tamilnadu govt film awards for 2009 to 2014 announced tamilnadu govt film awards for 2009 to 2014 announced tamilnadu govt film awards for 2009 to 2014 announced