ட்ரெண்டிங்,இன்ஸ்டன்ட் ஹிட்,Charbuster-ன்னு இப்போ ஹிட் ஆகுற பாடல்களுக்கு பல Tagline ரசிகர்கள் கொடுத்து வராங்க.இந்த Generation ரசிகர்களோட டேஸ்ட் முன்னாடி Generation டேஸ்ட் விட மாறியிருக்கத்தால,டியூன்,லிரிக்ஸ்ன்னு அப்போ இருக்க ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி மாற்றங்கள் வந்துகிட்டே தான் இருக்கும்.அப்படி மக்களோட டேஸ்ட் தெரிஞ்சு கரெக்ட்டா அவங்க விரும்புறதை தரவங்க சினிமாவுல பெரிய இடத்தை பிடிப்பாங்க.

அப்படி ரசிகர்களோட ரசனை அறிஞ்சு ஒவ்வொரு படத்துலயும் தன்னை மெருகேத்துற ஒருத்தர் தான் சிவகார்த்திகேயன்.டிவில இருந்து சினிமாவுக்கு வந்து இப்போ தமிழ் சினிமாவோட முன்னணி ஹீரோக்கள்ல ஒருத்தரா இருக்குற அவரோட வளர்ச்சி பல பேரை ஆச்சரிய பட வெச்சுருக்கு.அதுக்கு முக்கியமான ஒரு காரணம் ரசிகர்களோட Pulse அவர் புரிஞ்சு வெச்சுருக்க ஒண்ணு தான்.

தன்னோட படங்கள் தொடங்கி பாடல்கள் வர குழந்தைங்கள்ல இருந்து பெரியவங்க வர எல்லாருக்கும் பிடிக்கணும்னு தன்னோட டீமோட சேர்ந்து நல்ல Output கொடுத்துட்டு வராங்க.நேத்து ரிலீசான இவரோட ப்ரின்ஸ் படத்தோட பிம்பிலிக்கி பிலாப்பி பாடல் ரசிகர்கள் கிட்ட நல்ல வரவேற்பை பெற்று செம ட்ரெண்டிங்க்ல இருந்துட்டு வருது.

தமன் இசையில டியூன் பட்டையை கிளப்ப , அனிருத் வாய்ஸ் லைக்ஸ் அள்ள , ஆல் சென்டரையும் கவர் பண்ற மாறி SK தன்னோட Fire-ஆன டான்ஸ் வெளிப்படுத்தன்னு,பாட்டு பட்டாசா இருக்குன்னு ரசிகர்கள் பாராட்டிட்டு இருக்காங்க.லிரிக் வீடியோவே இப்படி இருக்குன்னா முழு வீடியோ எப்படி இருக்கப்போகுதுன்னு ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புல இருக்காங்க.

பிம்பிலிக்கி பிலாப்பின்னு ரசிகர்களை டக்குன்னு கவர பேரை பாட்டுக்கு வெச்சு,அதற்கேற்ப டியூன்,டான்ஸ்ன்னு டக்கரா இந்த பாட்டு ரசிகர்கள் கிட்ட உடனே ஹிட் அடிச்சுது.இந்த மாதிரி புரியாத வார்த்தை இப்போ தான் சிவகார்த்திகேயன் பாட்டுல வருதான்னு கேட்டீங்கன்னா , இதுக்கு முன்னாடி ஒரு சில வாட்டி இதே மாதிரி புரியாத வார்த்தைகள் use பண்ணி பாட்டெல்லாம் செம ஹிட் அடிச்சுருக்கு.

அப்படி புரியாத லிரிக்ஸ் , Catchy லிரிக்ஸ் வெச்சு சிவகார்த்திகேயன் படத்துல வந்த பாட்டு பட்டையை கிளப்புன சூப்பர்ஹிட் அடிச்ச பாட்டு எது எதுன்னு ஒரு லிஸ்ட் எடுத்துருக்கோம் அது என்னென்ன பாட்டுன்னு இப்போ பார்க்கலாம் வாங்க

பிம்பிலிக்கி பிலாபி - ப்ரின்ஸ்

ரிலீஸ் ஆன டைம்ல இருந்து செம ஹிட் செம ட்ரெண்டிங்ல இருக்கு இந்த பாட்டு அதுக்கு முக்கிய காரணம் peppy tune,SK டான்ஸ்ன்னு ரசிகர்கள் கிட்ட வேற லெவல்ல வைரல் ஆகிட்டு இருக்கு இந்த பாட்டு.நிறைய Record இந்த பாட்டு பண்ணும்னு ரசிகர்கள் எதிர்பார்க்குறாங்க.

ஜலபுல ஜங்கு - டான்

இன்ஸ்டண்டா இளைஞர்களை கவர்ந்த பாட்டு , பல காலேஜ் Culturals-ல ஒலிக்கிற பாட்டு இப்படி பல சிறப்பம்சங்களை பெற்று பட்டையை கிளப்புன பாட்டு தான் ஜலபுல ஜங்கு.SK டான்ஸ் அனிருதோட energetic வாய்ஸ்ன்னு Jolly Anthem-ஆ இந்த பாட்டு செம ஹிட் அடிச்சது.

பாபகச - Soul of Doctor - டாக்டர்

பாட்டு ரிலீஸ் அப்போவே சோ பேபி பாட்டுல வர இந்த போர்ஷன் ரசிகர்கள் கிட்ட நல்ல வரவேற்பை வாங்கியிருந்துச்சு.அடுத்து ட்ரைலர்ல அந்த போர்ஷன் தீம் மியூசிக் வர இன்ஸ்டாக்ராம்ல பல ரசிகர்கள் அந்த மியூசிக் வெச்சு reels போட்டு பாட்டு செம ரீச் ஆச்சு.

கும்முறு டுப்புறு - காந்தக்கண்ணழகி - நம்ம வீட்டு பிள்ளை

பாட்டு வந்தப்போ இருந்தே ரசிகர்கள் கிட்ட , முக்கியமா குழந்தைங்க கிட்ட பெரிய வரவேற்பு.வீடியோ பாட்டு ரிலீஸ் ஆன அப்பறம் அந்த ஜாலி Step-க்கு குழந்தைங்க முதல் பெரியவங்க வரை எல்லாரும் Reels ட்ரை பண்ண ஒரு பாட்டு.200 மில்லியனை தாண்டி பட்டி தொட்டி எல்லாம் ஹிட் அடிச்சது இந்த கும்முறு டுப்புறு.இந்த பாடலோடு கூடுதல் சிறப்பம்சம் என்னன்னா சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதிருப்பாரு அவரோட செம ஜாலி லிரிக்ஸ் ரசிகர்கள் கிட்ட ஒரு பெரிய Vibe ஏற்படுத்துச்சு.

மால்டோ கிதாபுலே - ஹீரோ

புரியாத வார்த்தையா இருந்தாலும் ரசிகர்கள் கிட்ட நல்ல ரீச் ஆன பாட்டு , புதுசா ட்ரை பண்ணி சூப்பர்ஹிட் ஆன பாட்டு , யுவன் முதல் தடவையா சிவகார்த்திகேயனுக்கு பண்ண ஓப்பனிங் சாங்.ரசிகர்கள் கிட்ட நல்ல வரவேற்பை பெற்ற பாட்டு.

இதெல்லாம் சிவகார்த்திகேயன் படத்துல வந்த பாடல்கள் , இதை தவிர அவர் லிரிஸிஸ்ட்டா எழுதுன பாடல்களும் பெரிய வரவேற்பை பெற்றிருக்கு.கல்யாண வயசு,காந்தகண்ணழகி,செல்லம்மா,சோ பேபி,சும்மா சுர்ருன்னு,அரபிக் குத்து ன்னு தொட்டதெல்லாமே ஹிட்டா மாறுச்சு.அவர் எழுதுனதுலயே Catchy Lyrics இருக்க பாட்டு தான் அரபிக் குத்து

ஹலமத்தி ஹபிபோ - அரபிக் குத்து - பீஸ்ட்

தொடர்ந்து ஹிட் கொடுக்க சிவகார்த்திகேயன் தளபதி விஜய் மாதிரி ஒரு பெரிய ஹீரோவுக்கு பாட்டு எழுதுற வாய்ப்பு கிடைக்குது.அதுவும் வித்தியாசமா இருக்கனும் புரியாத மாதிரி catchy-ஆ  இருக்கனும் அதோட Instant-ஆ எல்லாருக்கும் புடிக்கிற மாதிரி இருக்கணும்னு எல்லாத்தையும் சூப்பரா கவர் பண்ற மாதிரி சிவகார்த்திகேயன் பக்காவா லிரிக்ஸ் எழுத அதுக்கு தளபதி தாறுமாறா டான்ஸ் ஆட பாட்டு பல 100 மில்லியனை கடந்து பெரிய சாதனை படைச்சுட்டு இருக்கு.

இப்படி சிவகார்த்திகேயன் நடிச்ச படங்கள் அவர் பாடல் எழுதுன படங்கள்னு ஏகப்பட்ட புரியாத Catchy-ஆன செம ஹிட் ஆன பாடல் வார்த்தைகள் இடம்பெற்றிருக்கு.இவை அனைத்தும் ரசிகர்கள் கிட்ட பெரிய வரவேற்பையும் பெற்றிருக்கு.தொடர்ந்து பல ஹிட் பாடல்களையும் புதிய Catchy-ஆன வார்த்தைகளையும் கொடுக்கணும்னு சிவகார்த்திகேயனை ரசிகர்கள் சார்பாக கேட்டு கொள்கிறோம்.