தெலுங்கு திரையுலகின் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஷர்வானந்த் தமிழிலும் காதல்னா சும்மா இல்லை, நாளை நமதே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இயக்குனர் M.சரவணன் இயக்கத்தில் வெளிவந்த எங்கே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். தொடர்ந்து இயக்குனர் சேரன் இயக்கத்தில் தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் தயாரான ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார். 

இந்த வரிசையில் மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நடிகர் ஷர்வானந்த் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் கணம். இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் தமிழில் கணம் - தெலுங்கில் ஓக்கே ஒக்க ஜீவிதம் என தயாராகியுள்ள இத்திரைப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

ஷர்வானந்த் உடன் இணைந்து கணம் திரைப்படத்தில், ரித்து வர்மா கதாநாயகியாக நடிக்க, அமலா, நாசர், ரமேஷ் திலக், சதீஷ், M.S.பாஸ்கர், ரவி ராகவேந்திரா, வையாபுரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுஜித் சாரங் ஒளிப்பதிவில், ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்யும் கணம் திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். 

டைம் ட்ராவல் கான்செப்டில் எமோஷனல் சயின்ஸ் ஃபிக்சன் படமாக தயாராகி இருக்கும் கணம் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் கணம் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்த கணம் படத்தின் ட்ரைலர் இதோ…