தமிழ் திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக கடந்த 25 ஆண்டுகளாக ரசிகர்களை தொடர்ந்து தனது இசையால் மகிழ்வித்து வரும் யுவன் ஷங்கர் ராஜா கடந்த 1997 ஆம் ஆண்டு வெளிவந்த அரவிந்தன் திரைப்படத்திலிருந்து சில வாரங்களுக்கு முன்பு வெளியான விருமன் திரைப்படம் வரை 150 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

காலத்தால் அழியாத பல நூறு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து மக்களின் மனதை வென்ற இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது தந்தை இசைஞானி இளையராஜா அவர்களை போலவே இசை ரசிகர்களின் இதயங்களில் தனக்கென தனி சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார். மேலும் அட்டகாசமான பின்னணி இசையை கொடுத்து (BGM King) தீம் மியூசிக் மன்னனாகவும் திகழ்கிறார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கவுள்ளது. நாளை செப்டம்பர் 3-ஆம் தேதி சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் யுவன் ஷங்கர் ராஜா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்யபாமா பல்கலைக் கழகத்தின் 31 ஆவது பட்டமளிப்பு விழாவில் தனது 16 வயது முதல் இசையமைப்பாளராக பணியை தொடங்கி கடந்த 25 ஆண்டுகளாக 150 திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் தங்கப்பதக்கம் உட்பட 2666 மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 

Sathyabama University to honor music composer #YuvanShankarRaja with an honorary doctorate on September 03, 2022.@thisisysr @SathyabamaSIST pic.twitter.com/XYv6gUJ1hb

— Galatta Media (@galattadotcom) September 2, 2022