உலக அளவில் ஒட்டு மொத்த திரையுலகினரையும் தனது படைப்பால் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் இயக்குனர் பார்த்திபன் அவர்களின் சாதனை முயற்சியாக உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக வெளிவந்த இரவின் நிழல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றதோடு அனைவரது பாராட்டு மழையில் நனைந்து வருகிறது.

பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் தயாரித்துள்ள இரவின் நிழல் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் வெளியிட்ட இரவின் நிழல் திரைப்படத்தில் இயக்குனர் பார்த்திபனுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், ப்ரிகிடா, ரோபோ ஷங்கர் ,பிரியங்கா மற்றும் கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

இரவின் நிழல் திரைப்படத்தின் மற்றொரு மிகப் பெரிய பலமாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையும் பாடல்களும் அமைந்தது. ஆர்தர்.A.வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ள இரவின் நிழல் திரைப்படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற VFX கலைஞர்களான காட்டலாங்கோ லியோன் மற்றும் கிரேக் மேன் ஆகியோர் பணியாற்றி உள்ளனர்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மதிப்பிற்குரிய திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது இயக்குனர் பார்த்திபனுடன் இரவின் நிழல் திரைப்படத்தை பார்த்து ரசித்துள்ளார். இது குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், 

“எதிலும் தனிப்பாணி - அதுதான் பார்த்திபன்!
#OthaSeruppu-க்குப் பிறகு ஒத்த ஷாட் படம்!
#IravinNizhal படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ்த் திரையுலகின் தொழில்நுட்பத் திறனின் உயரம்!
Nonlinear single shot படத்தின் மூலம் தான் ஒரு டெக்னாலஜி சீனியர் என காட்டியுள்ள அவருக்கு வாழ்த்துகள்!”
 

என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அந்த பதிவு இதோ…


 

Non-linear-ல்,நான் சீனியர் எனத் தமிழகமே பாராட்டிவிட்டது.முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி.பாராட்டப்படும் போது பட்டக் கடனும் படும் கஷ்டமும் தற்காலிகமாக தற்கொலை செய்துக் கொள்கின்றன.இனி
பார்…
பார்க்க ….
பாராட்டும் https://t.co/e78tlsp4IS

— Radhakrishnan Parthiban (@rparthiepan) August 1, 2022