இந்திய சினிமாவில் தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுக்கும் வெற்றிகரமான இயக்குனராகவும் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட் நடிகராக தனக்கே உரித்தான ஸ்டைலான நடனத்தால் அனைவரையும் கவரும் பிரபுதேவா, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்திருக்கும் சைக்கோ த்ரில்லர் திரைப்படமான பஹீரா வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. 

தொடர்ந்து ஃபிளாஷ்பேக், ரேக்ளா, முஸாஸிர் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து பிரபுதேவா நடிப்பில் வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன. இதனிடையே இயக்குனர் சந்தோஷ்.P.ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் பொய்க்கால் குதிரை. 

மினி ஸ்டூடியோ மற்றும் டார்க் ரூம் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள பொய்க்கால் குதிரை படத்தில் பிரகாஷ்ராஜ், வரலக்ஷ்மி சரத்குமார், ஷ்யாம், ஜெகன், ரைசா வில்சன் மற்றும் ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பொய்க்கால் குதிரை படத்திற்கு பல்லு ஒளிப்பதிவில் டி.இமான் இசை அமைத்துள்ளார். 

பொய்க்கால் குதிரை திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், பொய்க்கால் குதிரை திரைப்படத்தில் இருந்து பிரபு தேவாவின் அதிரடியான Sneak Peek வீடியோ தற்போது வெளியானது. கவனம் ஈர்க்கும் அந்த Sneak Peek வீடியோ இதோ…