எதிர்கால சந்ததிக்கான இயற்கையை சீரழிக்கும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதே எங்களின் பிரதான இலக்கு என யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜு தெரிவித்தார்
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இன்றைய நவீன உலகில் அறிவியலால் கூட அழிக்க முடியாத அரக்கனாகதிகழ்வது பிளாஸ்டிக் பொருள்கள்தான்.  கையாள்வதற்கு எளிதாக தெரியும் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் ஒருமுறை உபயோகத்திற்கு பிறகு எளிதில் தூக்கி எறியப்படுகிறது.

ஆனால் தூக்கி எறியப்படும் இந்த பிளாஸ்டிக் கழிவுகள் இந்த பூமி பந்தையே சீரழிக்கும் நவீன அணுகுண்டுகள் என்பதையாரும் அறிவதில்லை.

என்றும் அழிவில்லை

பூமியில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மக்கும்தன்மை கொண்டதில்லை.  இதனால் பிளாஸ்டிக் குவியும் நிலப்பரப்பு உயிரினங்கள் வாழ்வதற்கே உகந்த நிலப்பரப்பாக இருக்க போவதில்லை.  பூமிமட்டும்அல்ல. பிளாஸ்டிக் கழிவுகளால் நீர்நிலைகளும் பாழடைந்து வருகிறது. 

பல்லுயிர் பெருக்கத்தின் கருவறையான இயற்கையின் சொர்க்கம் என்றழைக்கப்படும் சதுப்பு நிலகாடுகள் கூட இன்று மக்காத பிளாஸ்டிக் கழிகளால் மண்ணோடு மண்ணாகி வருகிறது.

கடலில் குவியும் கழிவுகள்

சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும்பகுதிகளில் முதலிடம் வகிப்பது கடற்கரைகள்தான்.  குறிப்பாக புதுச்சேரி கடற்கரை பகுதிகளுக்கு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி வருகிறது.

அதே வேளையில் சுற்றுலா பயணிகளின் வீசி செல்லும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்கள் கடற்கரை ஓரங்களில் மட்டும் அல்ல, ஆழ்கடல் பகுதியிலும் மலை போல் குவிந்து வருகிறது. 

இதனால் கடல் வளம் முற்றிலுமாக சீரழிந்து வருகிறது.  ஆழ்கடலில் சேரும்பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் மீன்களும்' ,இதர கடல்வாழ் உயிரினங்களும் கூட்டம் கூட்டமாக அழிந்துவருகிறது. மேலும் பவளப் பாறைகளில் படியும் பிளாஸ்டிக் கழிவுகளால் மீன் இனப் பெருக்கமே முற்றிலும் அழியும் நிலை உள்ளது.

கடலில் சேகரிப்பு

இயற்கை சமநிலையை கேள்விக் குறியாக்கும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதே யுவர் பேக்கர் சின்பிரதான இலக்காகும். இதை மனதில் கொண்டு நாங்கள் கடந்த ஓராண்டாக புதுச்சேரி கடற்கரை உள்பட அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து வருகிறோம்

இது தவிர தினமும் படகு மூலம் ஆழ்கடலுக்கு சென்று கடலில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கரைக்கு கொண்டு வந்து மறுசுழற்சி செய்து பிளாஸ்டிக்கை அழிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.  இது வரை கடலில் சேர்ந்த 70 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பாராட்டு

எங்களின் இந்த முயற்சியை அங்கீகரிக்கும் விதமாக பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டு மக்களுக்கு ஆற்றிய மனதின் குரல் வானொலி உரையில் " புதுச்சேரி இளைஞர்கள் ஆழ்கடலில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் முயற்சி உன்னதமானது, பாராட்டுக்குரியது " என பாராட்டி மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கி உள்ளார். 

இதில் மணிமகுடமாக இன்று ஜுலை 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்திக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது எங்களின் சிறிய முயற்சிக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம் எனவே கருதுகிறோம்.

இதேபோல் புதுச்சேரி மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பொருள்கள் உபயோகத்திற்கு தடை என கடந்த  20  நாட்களுக்கு முன்னதாகவே புதுச்சேரி ஆளுனர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் அறிவித்தார். 

இவ்வாறான வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை கொடுத்து எங்களுக்கு அங்கீகாரம் அளித்த பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் புதுச்சேரி ஆளுனர் திருமதி தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோருக்கு எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மஞ்சபைக்கு மாறுவோம்


அரசு உத்தரவு எதுவாக இருந்தாலும் மாற்றம் என்பது மக்கள் மனதில் இருந்து தான் வரவேண்டும்.  பிளாஸ்டிக் எனும் அரக்கனை அழிக்க பொதுமக்கள் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

புதுச்சேரி மாநிலத்தை இந்தியாவிலேயே பிளாஸ்டிக் இல்லாத முதல் மாநிலமாக மாற்றயுவர் பேக்கர்ஸ் முடிவு செய்து களம் இறங்கி உள்ளோம். 

சேவை மனம் கொண்ட அனைவரும் எங்களுடன் கைகோர்க்கலாம்.  பிளாஸ்டிக்கை ஒழிக்க அனைவரும் மீண்டும் மஞ்சப்பைக்கு  மாறவேண்டும்.


 
1 லட்சம் மஞ்சப்பை

இதற்காக புதுச்சேரி முழுவதும் பொது மக்களுக்கு 1 லட்சம் மஞ்சள்பை இலவசமாக வழங்கும் திட்டத்தை தொடங்க உள்ளோம். 

"பிளாஸ்டிக் ஒழிப்பே பிரதான இலக்கு" என்பதே எங்களின் எதிர் காலதிட்டமாகும்.

இவ்வாறு யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜு தெரிவித்துள்ளார்.