இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமாக மிகப்பிரமாண்டமாக தயாராகியிருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ரஹ்மான், விக்ரம் பிரபு, பிரபு ஆகியோர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களாக நடிக்க, அஸ்வின் காக்குமனு, நிழல்கள் ரவி, கிஷோர், ரியாஸ் கான், லால், நாசர், மோகன் ராமன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்

தோட்டாதரணி கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்யும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. 

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடலாக பொன்னி நதி பாடலும் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், பொன்னியின் செல்வன்-1 படத்தின் டால்பி அட்மாஸ் சவுண்ட் மிக்ஸிங் பணிகள் தற்போது லாஸ் ஏன்ஜல்ஸில் நடைபெற்று வருவதாக தெரிவித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இதோ...

 

 

View this post on Instagram

A post shared by ARR (@arrahman)