படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களையும், நல்ல கதை களங்களையும் தேர்ந்தெடுத்து மிகச் சிறப்பாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் கார்த்தி, இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமாக பிரம்மாண்ட படைப்பாக உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வல்லவரையன் வந்தியத்தேவன் எனும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இரண்டு பாகங்களாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக இயக்குனர் P.S மித்ரன் இயக்கத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருக்கும் சர்தார் திரைப்படம் இந்த ஆண்டு(2022)  தீபாவளி வெளியீடாக அக்டோபர் மாதம் 24ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பருத்திவீரன் & கொம்பன் பட வரிசையில் கார்த்தி நடிப்பில் தயாராகியிருக்கும் விருமன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியிருக்கும் விருமன் திரைப்படத்தை சூர்யா & ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ள விருமன் திரைப்படத்தில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.செல்வக்குமார்.S.K ஒளிப்பதிவில் விருமன் திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் விருமன் படத்தின் கேரளா ரிலீஸ் உரிமையை Fortune சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Happy to associate with @cinemas_fortune for the Kerala release of #Viruman

In theatres from August 12th!@Karthi_Offl @Suriya_offl @dir_muthaiya @thisisysr @AditiShankarofl @rajsekarpandian @prakashraaj #Rajkiran @sooriofficial pic.twitter.com/mK1PHGXIjI

— 2D Entertainment (@2D_ENTPVTLTD) August 1, 2022