சிறந்த நடிகையாகவும் முன்னணி நட்சத்திர நாயகியாகவும் தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களான நடிகர்கள் அனைவருடனும் இணைந்து கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை அமலா பால். அந்த வகையில் அடுத்தடுத்து அமலாபால் நடிப்பில் வரிசையாக திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

முன்னதாக நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் பிரம்மாண்ட படைப்பாக மலையாளத்தில் தயாராகி வரும் ஆடுஜீவிதம் திரைப்படத்தில் நடிகை அமலாபால் கதாநாயகியாக நடித்து வருகிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் ஆடுஜீவிதம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே இயக்குனர் அனூப் S பணிக்கர் இயக்கத்தில் த்ரில்லர் திரைப்படமாக அமலாபாலின் மிரட்டலான நடிப்பில் தயாராகியிருக்கும் கடாவர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீசாகவுள்ளது. கடாவர் படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார்.

அமலாபால் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் அமலாபால் தயாரித்து நடிக்கும் கடாவர் திரைப்படத்தில் ஹரிஷ் உத்தமன், ரித்விகா பன்னீர்செல்வம், ரஞ்சின் ராஜ், முனிஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் கடாவர் திரைப்படத்தின் முதல் பாடல் வருகிற ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Three cheers for Cadaver's first single! #CadaverOnDisneyplusHotstar #DisneylusHotstarMultiplex@harishuthaman @ThrigunAactor @AthulyaOfficial @riythvika @AmalaPaulProd @thanzeersalam @AnnicePaul6 @dinesh_WM @SureshChandraa @anoop_panicker @thinkmusicindia @disneyplusHSTam pic.twitter.com/5lCaZRdi8h

— Amala Paul ⭐️ (@Amala_ams) August 1, 2022