சில வருடங்களுக்கு முன் சூர்யா படத்தில் நடந்த சில விஷயங்கள் நிஜத்திலும் நடந்து வந்தன.7ஆம் அறிவு படத்தில் வருவதை போல கொரோனா வைரஸ்,காப்பான் படத்தினை போல வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்வது என சில உத்தாரணங்கள் உள்ளன.

சூர்யா இல்லுமினாட்டியா? இல்லை தீர்க்கதரிசியா? என நெட்டிசன்கள் என பலரும் இது குறித்து மீம்களை பதிவிட்டு வந்தனர்.அந்த மீம்கள் சற்று குறைந்து அனைவரும் அடுத்தடுத்த ரிலீஸ் படங்களை கொண்டாடி வரும் வேளையில் இப்போது மீண்டும் அன்றே கணித்த சூர்யா மொமெண்ட் வந்துள்ளது.

கமல் நடிப்பில் ஜூன் 3ஆம் தேதி வெளியாகி அசத்தலான வரவேற்பை பெற்று வரும் படம் விக்ரம் இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் கைதி படத்தின் கதைக்களமும் இணைவது போல உருவாக்கப்பட்டிருக்கும்.இதில் சூர்யா ஒரு கொடூர வில்லனாக அடுத்த கைதி மற்றும் விக்ரம் படங்களுக்கு லீட் கொடுப்பது போல வந்திருப்பார்.

இதன்மூலம் அடுத்து வரும் விக்ரம் 3 மற்றும் கைதி 2 படங்களில் முக்கிய வில்லனாக கமல் மற்றும் கார்த்திக்கு எதிராக சூர்யா வில்லனாக தோன்றுவார் என்பது தெரியவந்துள்ளது.சில வருடங்களுக்கு முன் நடைபெற்ற இந்தியன் சினிமா 100 ஆண்டுகள் விழாவில் சூர்யா பேசியபோது , சூர்யா வில்லனாக நடிக்க வேண்டும் என்றால் கார்த்தி பட்டை போட்டுகொண்டு ஹீரோவாக நடிக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்.இது கிட்டத்தட்ட அடுத்து நடைபெறும் என்பதால் மீண்டும் அன்றே கணித்த சூர்யா என ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.