பெண் குழந்தை பெற்றெடுத்த மனைவியின் அந்தரங்க உறுப்பை கடுமையாக தாக்கிய கொடூர கணவன்!

பெண் குழந்தை பெற்றெடுத்த மனைவியின் அந்தரங்க உறுப்பை கடுமையாக தாக்கிய கொடூர கணவன்! - Daily news

பெண் குழந்தை பெற்றெடுத்த குற்றத்திற்காக, அந்த மனைவியின் அந்தரங்க உறுப்பை கடுமையாக தாக்கிய கொடூர கணவனை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இந்த குற்றச்சாட்டிற்கு சாட்சியாக தான், பெண் குழந்தை பெற்றெடுத்த மனைவியின் அந்தரங்க உறுப்பை, கணவன் ஒருவன் கடுமையாக தாக்கி இருக்கும் சம்பவமும் அமைந்திருக்கிறது.

எப்போதும் போல, உத்தர பிரதேச மாநிலத்தில் தான் இந்த கொடூர குற்றமும் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹமிர்புர் மாவட்டத்தைச் சேர்ந்த குஸ்மா என்ற பெண், தனது பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், இந்த பெண்ணிற்கு,  நீரஜ் ப்ரஜாப்தி என்ற நபருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடந்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

தற்போது, இந்த தம்பதிக்கு 7 வயதில் ப்ரான்ஷி என்ற பெண் குழந்தையும், 2 வயதில் ஆர்த்தி என்ற பெண் குழந்தைகள் என மொத்தம் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

அத்துடன், இந்த தம்பதிக்கு முதல் குழந்தை பெண் பிள்ளையாக பிறந்த போதே, கணவன் நீரஜும் அவரது பெற்றோரும் அதிருப்தி அடைந்து, இது குறித்து தனது மனைவியுடன் அவர் சண்டையும் போட்டியிருக்கிறார். 

மேலும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த 2 வது குழந்தையும் பெண்ணாகவே பிறந்ததால், அவரது மனைவி குஸ்மா மீது அவரது கணவன் நீரஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து சண்டை போட்டு அடித்து, உதைத்து வன்முறையை கையாண்டிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

முக்கியமாக, இந்த வன்முறையானது தற்போது உச்சக்கட்டத்தை எட்டி இருக்கிறது.

அதாவது, ஆண் குழந்தை பெற்றுத் தராத கோபத்தில், கணவன் நீரஜ், அவரது மனைவி குஸ்மாவின் அந்தரங்க உறுப்புகளை கொடூரமான முறையில் தாக்கியிருக்கிறார். நீரஜ் உடன் சேர்ந்து அவரது குடும்பத்தினரும் அந்த பெண்ணை கொடூரமாக தாக்கி உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, அந்த இரு குழந்தைகளை படிக்க வைக்கவும், அவர்களுக்கான செலவுக்கு பணம் கொடுப்பதையும் நீரஜ் நிறுத்தி இருக்கிறார்.

நீரஜின் இந்த கொடூர செயல்கள் குறித்து தெரிந்துகொண்ட குஸ்மாவின் தந்தை, கடும் அதிர்ச்சியடைந்த நிலையில் அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார். 

மேலும், இது தொடர்பாக விசயத்தை கேள்விப்பட்ட மருத்துவமனைக்கு சென்ற அங்குள்ள கொட்வாலி போலிசார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து வாக்குமூங்களைப் பெற்று, 

இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், குஸ்மாவை தாக்கிய அவரது கணவன் நீரஜ், அவரது பெற்றோர் உள்ளிட்ட 5 பேர் மீது கொலை வெறி தாக்குதல் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அந்த மாநிலம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment