வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் வைப்பதில் பள்ளி தோழிகளுடன் பிரச்சனை.. 12 ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை!

வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் வைப்பதில் பள்ளி தோழிகளுடன் பிரச்சனை.. 12 ம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை! - Daily news

12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிகளுக்குள் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் வைப்பதில் பிரச்சனை ஏற்பட்டதால், மனமுடைந்த மாணவி ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு சோகமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்து உள்ள சோழமா தேவியைச் சேர்ந்த 50 வயதான காமராஜ், கூலி வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு 17 வயதில் கீர்த்தனா என்ற மகள் இருக்கிறார். அந்த பெண், அங்குள்ள உடுமலையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். 

அந்த மாணவி, தற்போது 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு, டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் டைப்பிங் கற்றுக்கொண்டு வருகிறார்.

இந்த சூழலில் தான், அந்த மாணவி நேற்று மதியம் தனது வீட்டின் அருகில் உள்ள கிணற்றுக்கு சென்று இருக்கிறார். சுமார் 60 அடி ஆழம் கொண்ட கிணற்றில் சுமார் 50 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்து உள்ளது. 

அப்போது, அந்த கிணற்றின் ஓரமாய் நின்ற அந்த மாணவி கீர்த்தனா, தனது உறவினர் மனோஜ் என்பரை போனில் அழைத்து “நான் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்” என்று, கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அவர், “அப்படி செய்யாதே” என்று கூறியிருக்கிறார். 

ஆனால், இதனை துளியும் காதில் வாங்காத அந்த மாணவி, தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்யாமல் அந்த பகுதியில் தூக்கி வீசி விட்டு அந்த கிணற்றில் குதித்து உள்ளார்.

ஆனால், செல்போன் தூக்கி வீசும் போது அதனை ஆப் செய்யாததால், கீர்த்தனா கிணற்றில் விழுத்த சத்தம் அப்படியே, மனோஜிக்கு கேட்டிருக்கிறத.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மனோஜ், உடனடியாக அங்குள்ள சோழமா தேவியை சேர்ந்த பிரபாகரன் என்பவரை தொடர்பு கொண்டு, கீர்த்தனாவை காப்பாற்று வேண்டியிருக்கிறார். 

இதனையடுத்து, பிரபாகரன் அங்கு சென்று பார்த்தபோது, அந்த கிணற்றின் அருகில் கீர்த்தனாவின் செருப்பும், செல்போனும் கிடந்து உள்ளது.

அப்போது, பிரபாகரன் உடனடியாக அங்குள்ள உடுமலை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆணால், தீயணைப்புத் துறையினர் அங்கு வந்து சேர்வதற்குள், அந்த மாணவி சடலமாக மிதந்து உள்ளார்.

இதனையடுத்து, உயிரிழந்த நிலையில் கீர்த்தனாவின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்து இருக்கிறார்கள்.

பின்னர், அந்த மாணவியின் உடலை உடுமலை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இது தொடர்பாக கீர்த்தனாவின் தந்தை காமராஜ் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். 

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், “அந்த மாணவி, தனது செல்போனில் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் வைப்பது தொடர்பாக, தனது தோழிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி அந்த மாணவி கீர்த்தனா, தற்கொலை செய்து கொண்டது” தெரிய வந்தது. 

அத்துடன், இந்த சம்பவம் குறித்து, சம்மந்தப்பட்ட சக பள்ளி மாணவிகளிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment