கலைஞர் தொலைக்காட்சியில் இளம் திறமையாளர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர உருவாகும் புத்தம் புதிய பிரம்மாண்ட மேடை "லிட்டில் சூப்பர் ஹீரோஸ்".

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்திறமை இருக்கும். அந்த திறமையை சரியான நேரத்தில், சரியான வழியில், சரியாக பயன்படுத்தவில்லை எனில் அது தன் மதிப்பை அடையாது. இப்படி
இருக்க, குழந்தைகளாக நம் முன் வலம் வரும் இளம் திறமையாளர்களின் திறமைகளை உலகறியச் செய்யும் விதமாக நமது கலைஞர் தொலைக்காட்சியில், முற்றிலும் மாறுபட்ட புத்தம் புதிய
பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

kalaignar tv little super heroes press release

வீட்டில் சுட்டித்தனம் செய்யும் குழந்தைகளின் அசாத்திய திறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் விதமாக உருவாகும் இந்த நிகழ்ச்சியின் மூலம், பலதரப்பட்ட வித்தியாசமான திறமைகள் கலைஞர் தொலைக்காட்சியின் மூலம் உலகறியப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் கருணாகரன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

வருகிற ஜூன் 5 முதல் ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கும், இரவு 7 மணிக்கும் "லிட்டில் சூப்பர் ஹீரோஸ்" கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.