முன்னணி OTT மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று அமேசான் ப்ரைம்.முதலில் படங்களை வாங்கி அதன் திரையரங்க ரிலீசுக்கு பின் வெளியிட்டு வந்த இந்த நிறுவனம் கொரோனாவின் போது திரையரங்குகளில் வெளிவராமல் நேரடியாக ஸ்ட்ரீம் ஆகும் படங்கள் மற்றும் சீரிஸ்களை வாங்கி வெளியிட்டு வந்தனர்.இவற்றுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து பல வெப் சீரிஸ்கள் மற்றும் நேரடி படங்களை வெளியிடவும் தயாரிக்கவும் தொடங்கினர் அமேசான் ப்ரைம்.அப்படி சில மாதங்களுக்கு முன் விரைவில் வெளியாகவுள்ள சில வெப் சீரிஸ்களின் அறிவிப்புகளை அமேசான் வெளியிட்டனர்,அதில் முக்கியமான ஒன்று சூழல்.

கதிர்,ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.விக்ரம் வேதா இயக்குனர்கள் புஷ்கர்-காயத்ரி எழுதி தயாரித்துள்ள இந்த சீரிஸை இயக்குனர்கள் பிரம்மா மற்றும் அனுசரண் இணைந்து இயக்கியுள்ளனர்.பார்த்திபன்,ஷ்ரியா ரெட்டி,ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த சீரிஸின் பர்ஸ்ட்லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த சீரிஸ் வரும் ஜூன் 17ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகும் என்ற அறிவிப்பை ஒரு மோஷன் போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.இந்த சீரிஸின் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.