வாலி,குஷி போன்ற தனது வித்தியாசமான படங்கள் மூலம் இயக்குனராக பெரிய பெயர் எடுத்தவர் எஸ் ஜே சூர்யா.அடுத்ததாக தான் இயக்கிய நியூ,அன்பே ஆருயிரே,இசை உள்ளிட்ட படங்களில் தானே நடித்து தனக்குள் இருக்கும் நடிகனையும் அடையாளம் கொண்டார் எஸ் ஜே சூர்யா.

மற்ற இயக்குனர் படங்களிலும் இவர் நடிக்க தொடங்கினார் இவர் நடித்த இறைவி,மான்ஸ்டர்,நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்களில் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.ஹீரோவாக மட்டுமல்லாமல் முன்னணி நாயகர்களுக்கு வில்லனாகவும் ஸ்பைடர்,மெர்சல்,மாநாடு,டான் படங்களில் நடித்து அசத்தியிருப்பார் எஸ் ஜே சூர்யா.

அடுத்ததாக கடமையை செய்,பொம்மை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் எஸ் ஜே சூர்யா.கடமையை செய் படத்தினை வெங்கட் ராகவன் இயக்கியுள்ளார்.யாஷிகா ஆனந்த் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தியுள்ளார்.அருண்ராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் வரும் ஜூன் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.