சைபர் குற்றங்களில் உலக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா?

சைபர் குற்றங்களில் உலக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா? - Daily news

சைபர் குற்றங்களால் இந்தியா மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், உலக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம் என்கிற தகவலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெரும் அளவில் அதிகரித்திருப்பதாக ஒரு பக்கம் கவலை அளிப்பதாக இருந்தாலும், மற்றொரு பக்கம்  “இந்தியாவில் சைபர் குற்றங்களானது கடந்த 3 ஆண்டில் 5 மடங்கு அளவுக்கு அதிகரித்திருப்பதாக” நாடாளுமன்ற குழுவிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 

அதாவது, “இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் 400 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளதாக” கடந்த ஆண்டு அறிக்கை ஒன்று வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இது தொடர்பாக, தேசிய குற்ற ஆவண காப்பகம் புள்ளி விரபங்களை வெளியிட்டு அந்த தகவலை உறுதி செய்தது. 

தற்போது அதன் தொடர்ச்சியாக, “சைபர் குற்றங்களால் உலக அளவில் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் நிலை” பற்றிய அதிர்ச்சி தகவல்களும், தற்போது வெளியாகி உள்ளன.

இந்தியாவே, டிஜிட்டல் உலகிற்கு மாறினாலும், இங்கு மாறி வரும் இந்த தொழில் நுட்ப உலகில், அதற்கு ஏற்றபடியான குற்றங்களும் புதிய புதிய வடிவங்களில் பொது மக்களை பாதித்துக்கொண்டு தான் இருக்கிறது.

அதாவது, இந்தியாவில் தற்போது ஆன்லைன் என்பது எந்த அளவுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறதோ அந்த அளவுக்கு தற்போது சைபர் குற்றங்களும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருப்பது உண்மையே. 

அந்த வகையில், உலக நாடுகளில் இந்தியா மட்டுமல்லாமல், மற்ற உலக நாடுகளில் கோடிக்கணக்கானவர்கள் இப்படியான சைபர் குற்றங்களால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

அந்த வகையில், அமெரிக்காவின் FBI யின் சமீபத்திய அறிக்கையின் படி, “சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் மிக அதிகமாக இருக்கும் என்றும், இதில் முதல் 5 உலக நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றிருப்பது” கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதன்படி, சைபர் குற்றங்களால் முதல் 5 நாடுகளில் அதிக பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் முதல் இடத்தில் கிட்டத்தட்ட நான்கரை லட்சத்துக்கும் மேலான குற்ற சம்பவங்களுடன் பாதிக்கப்பட்ட முதல் நாடாக அமெரிக்கா இருக்கிறது.

3 லட்சத்துக்கும் மேலான குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இங்கிலாந்து 2 வது இடத்தில் உள்ளது.

3 வது இடத்தில் கிட்டத்தட்ட 6000 பொது மக்கள் பாதிக்கப்பட்டதாக கனடா திகழ்கிறது.

இந்த பட்டியலில், இந்தியா 3131 நபர்கள் சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கொண்டு, 4 வது இடத்தில் இருக்கிறது. 

குறிப்பாக, FBI வெளியிட்ட இந்த அறிக்கையானது, “கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு இறுதி வரை சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அடிப்படையில்” இந்த பட்டியில் வெளியிடப்பட்டு உள்ளது.

மேலும், இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவிலேயே உள்ளதாக FBI தெரிவித்து இருக்கிறது. 

அதே போல், ஜப்பானிலும் மிக குறைவான அளவு புகார்கள் தான் பதிவாகி உள்ளதாகவும், FBI வெளியிட்ட இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment