பெற்ற மகள் என்றும் பார்க்காமல், கள்ளக் காதலனை அனுப்பி தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய வைத்து தொடர்ச்சியாக 8 முறை கருமுட்டை விற்பனை செய்ய வைத்த கொடூரத்தாய் உட்பட மொத்தம் 3 பேரை போலீசார் தட்டி தூக்கி உள்ளனர்.

ஈரோட்டில் தான் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஈரோட்டைச் சேர்ந்த 38 வயதாகும் ஒரு பெண்ணுக்கு, பள்ளியில் படிக்கும் 16 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார்.

அந்த 16 வயது சிறுமிக்கு 3 வயது இருக்கும் போதே, அந்த சிறுமியின் தாயார், அவரது கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

இதனையடுத்து, ஈரோட்டை சேர்ந்த 40 வயதான பெயிண்டர் ஒருவருடன் அந்த பெண்ணுக்கு அறிமுகம் ஏற்பட்டு, அவர்களுக்குள் நாளடைவில் கள்ளக் காதல் ஏற்பட்டு உள்ளது.

இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். ஒரு கட்டத்தில், அந்த பெண், அந்த கள்ளக் காதலனுடன் சேர்ந்து குடும்பம் நடத்தித் தொடங்கினார்.

அத்துடன், அந்த சிறுமியின் தாய் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் தனது கருமுட்டையை விற்பனை செய்வதை, வாடிக்கையாக கொண்டிருந்தார்.

இதன் மூலமாக கிடைக்கும் வருமானத்தில் தான், அந்த பெண்ணும் அந்த பெண்ணின் கள்ளக் காதலனும் ஜாலியாக ஒரு உல்லாச வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

அதே நேரத்தில், அந்த சிறுமிக்கு 12 வயது நடக்கும் போதே, இந்த சிறுமியை வைத்தும் கருமுட்டை விற்பனை செய்வதில் ஈடுபடுத்த அவர்கள் இருவரும் சேர்ந்து திட்டமிட்டிருக்கிறார்கள்.

இதற்காக, அந்த சிறுமியின் 12 வயதில் இருந்தே கருமுட்டை விற்பனைக்காக, அந்த சிறுமியை தாயின் கள்ளக் காதலன் மற்றும் அந்த சிறுமியின் தயார் ஆகிய இருவரும் சிறுமியை தயார் செய்து வந்தனர்.

இதனால், அந்த சிறுமிக்கு அந்த தாயின் கள்ளக் காதலன் பாலியல் ரீதியாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்திருக்கிறான். 

அதன் பிறகு, அந்த கள்ளக் காதலன், தனது காதலியின் மகளை தொடர்ந்து பல முறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான். தனது மகளை வைத்து, கருமுட்டை விற்பனை செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக, அந்த சிறுமியின் தாயும், கள்ளக் காதலன் தனது மகளை பலாத்காரம் செய்ய முழு சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

அத்துடன், அந்த சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்வதற்கு, அந்த சிறுமியின் வயதை அதிகமாக காட்ட வேண்டும் என்பதற்காக, அவருக்கு போலியான ஆவணங்களை தயார் செய்து உள்ளனர். அதன் படி, அந்த சிறுமியின் பெயரில் போலியான புதிய ஆதார் கார்டு வாங்கி உள்ளனர்.

இந்த போலியான ஆவணத்தை பயன்படுத்தி ஈரோடு, சேலம், பெருந்துறை, ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அந்த  சிறுமியை அவரது தாயும், மாலதியும் அழைத்து சென்று கருமுட்டையை விற்பனை செய்து வந்திருக்கிறார்கள்.

குறிப்பாக, கருமுட்டை கொடுத்த அந்த சிறுமிக்கு ஒவ்வொரு முறையும் 20 ஆயிரம் ரூபாய் பணமும், புரோக்கராக செயல்பட்ட மாலதிக்கு கமிஷனாக 5 ஆயிரம் ரூபாய் பணமும் அந்த மருத்துவமனையின் சார்பில் வழங்கப்பட்டு இருக்கிறது. 

இப்படியாக, அந்த சிறுமியை மொத்தம் 8 முறை கருமுட்டையை கொடுக்க அவர்கள் வற்புறுத்தி உள்ளனர். 

முக்கியமாக, “சிறுமி, கருமுட்டை கொடுப்பதை வெளியில் சொன்னால், உன்னை கொன்று விடுவோம்” என்றும், அவர்கள் இருவரும் சிறுமியை கடுமையாக பயமுறுத்தி மிரட்டல் விடுத்தும் வந்திருக்கின்றனர்.

இப்படியாக, தாயாரின் கள்ளக் காதலன் அளித்த பாலியல் கொடூரங்கள் எல்லாம் எல்லை மீறி போகவே, ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்த அந்த சிறுமி, இது குறித்து சேலத்தில் உள்ள தனது உறவினர் மூலம் ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் அளித்து உள்ளார் அந்த சிறுமி.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த அந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து, சிறுமியின் தாய், அவரது கள்ளக் காதலன் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த மாலதி ஆகியோரை அதிரடியாக கைது செய்து, தங்களது பாணியில் விசாரணை நடத்தினர். 

பின்னர், இந்த 3 பேர் மீதும் போக்சோ உள்பட 10 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இன்னும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.