“போக்குவரத்து நெரிசலால் 3 சதவீத விவாகரத்துக்கள் நடக்கிறது” என்று, முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸை கூறியுள்ளது, இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

அதாவது, மகராஷ்டிரா மாநிலத்தில் தற்போது, காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் இணைந்த கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது. 

அதன் படி, சிவசேனா கட்சியையின் தலைவர் உத்தவ் தாக்கரே, முதலமைச்சராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தான், அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் பாஜக தலைவர்களில் மிக முக்கியமானவருமான தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸ், ஆங்கில ஊடகத்திற்கு முன்னதாக பேட்டி அளித்து உள்ளார்.

அம்ருதா ஃபட்னாவிஸ் அளித்த அந்த பேட்டியில், “நான் இதை ஒரு சாதாரண குடிமகனாகச் சொல்கிறேன். நான் வெளியே சென்றவுடன் பள்ளங்கள், போக்குவரத்து நெரிசல் உட்பட பல சிக்கல்களைப் பார்க்கிறேன்” என்று, சற்றே அரசியல் பேசத் தொடங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இங்கு ஏற்படும் போக்குவரத்து காரணமாக, மக்கள் தங்கள் குடும்பங்களுடன் நேரம் செலவளிக்க முடியவில்லை என்றும், இதனால்  மும்பையில் 3 சதவீத விவாகரத்துக்கள் நடக்கின்றன” என்றும், அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டார்.

“இப்படி, மும்பையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலைகளில் உள்ள பள்ளங்கள் காரணமாக 3 சதவீதம் அளவுக்கு விவாகரத்து நடைபெறுவதாக” தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருத் ஃபட்னாவிஸ் கூறியது, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இதனால், இதற்கு பதில் அளிக்கும் வகையில், அந்மாநில சிவசேனா கட்சியைச் சேர்ந்த பிரியங்கா சதூர்வேதி, “3 சதவீத மும்பைவாசிகள் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக விவாகரத்து செய்கிறார்கள் என்று கூறிய பெண்ணுக்கு, இந்த நாளின் சிறந்த Logic award வழங்கப்படுகிறது” என்று, கிண்டலத்துள்ளார். 

அத்துடன், அம்ருத் ஃபட்னாவிசை கலாய்க்கும் நோக்கில், “பெங்களூருவை சேர்ந்தவர்கள் இத்தகைய தகவல்களை படிக்காதீர்கள். அது உங்கள் திருமண வாழ்வுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்” என்றும், அவர் நக்கலடித்து உள்ளார்.

“மும்பையை விட பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் அதிகம் என்பதை குறிப்பிடும் விதமாக” அவர் இப்படியாக கூறியதாகவும், விளக்கம் அளித்து உள்ளார்.

மேலும், அம்ருத் ஃபட்னாவிஸ் பேட்டி இணையத்தில் வைரலான நிலையில், “இதற்கு ஆதாரம் எதுவும் இருக்கிறதா? என்று, பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.

இன்னும் சிலர், சமூக வலைதளங்களில் உள்ள அம்ருத் ஃபட்னாவிஸ் பேட்டியை  ட்ரோல் செய்து மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர். 

அதே போல் மற்றும் சிலர், “போக்குவரத்து நெரிசலால் பெங்களூரு, புனே, டெல்லியில் எத்தனை சதவீதம் விவாகரத்து நடைபெறுகிறது என்று தரவுகளை தாருங்கள்” என்றும், கேள்வி எழுப்பி உள்ளனர். 

இதனால், அம்ருதா ஃபட்னாவிஸ் பேட்டியானது, இந்திய அரசியலில் தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.