ரசிகர்கள் கொண்டாடும் சிறந்த என்டர்டெய்னிங் திரைப்படங்களை கொடுப்பதில் வல்லவரான இயக்குனர் வெங்கட் பிரபு தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார். முன்னதாக நடிகர் சிலம்பரசனின் சிறந்த கம்பேக் திரைப்படமாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த ஆண்டு(2021) இறுதியில் வெளிவந்த மாநாடு திரைப்படம் மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆனது.

இதனையடுத்து சில வாரங்களுக்கு முன்பு இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் 10-வது திரைப்படமாக தயாராகும் புதிய #VP10  திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. நடிகர் அசோக்செல்வன் கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்திற்கு இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாதன் நடித்த சூப்பர் ஹிட் படத்தின் டைட்டிலான மன்மத லீலை என பெயரிடப்பட்டது.

அசோக் செல்வன் உடன் இணைந்து ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் மற்றும் சம்யுக்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கும் மன்மத லீலை(A Venkat Prabhu Quickie) படத்திற்கு தமிழ் அழகன் ஒளிப்பதிவில் வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்ய நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் இசை அமைக்கிறார்.  ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிளாக் டிக்கெட் கம்பெனி இணைந்து வழங்கும் மன்மத லீலை(A Venkat Prabhu Quickie)  திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து கவனத்தை ஈர்த்தது.

முன்னதாக இன்று (பிப்ரவரி 6ஆம் தேதி) மன்மத லீலை திரைப்படத்தின் GLIMPSE வீடியோ ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பழம்பெரும் பின்னணிப் பாடகி கானக்குயில் லதா மங்கேஷ்கர் அவர்களின் மறைவு காரணமாக GLIMPSE வீடியோவின் ரிலீஸ் தள்ளிப் போவதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விரைவில் புதிய ரிலீஸ் தேதி மற்றும் இதர அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.