இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஆளுமையாக பல கோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகனாகவும் விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் அவர்கள் தயாரிக்கிறார்.

சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யாகிருஷ்ணன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் தரமணி & ராக்கி படங்களில் கதாநாயகனாக நடித்த வசந்த் ரவி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு மற்றும் மலையாள நடிகர் விநாயகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே தனது 80வது பிறந்த நாளை கொண்டாடும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், “என்னை எப்போதும் ஊக்கப்படுத்தும் ஒரு லெஜண்ட்... இந்திய திரை உலகின் உண்மையான சென்சேஷன் மற்றும் சூப்பர் ஹீரோ தனது 80-குள் நுழைகிறார். எனது அன்பிற்குரிய மற்றும் மிகுந்த மதிப்பிற்குரிய அமிதாப் பச்சன் ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!” என பதிவிட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வாழ்த்து பதிவைப் பார்த்து மனம் மகிழ்ந்த அமிதாப் பச்சன் அவர்கள் இதற்கு பதிலளிக்கும் வகையில், “ரஜினி சார்… உங்களுடைய புகழின் உயரத்திற்கும் மதிப்பிருக்கும் என்னை எப்போதும் நான் ஒப்பிட்டு பார்க்க முடியாது... உங்களை வெறும் என்னுடன் இணைந்து பணியாற்றும் சக நடிகராக மட்டும் பார்க்கவில்லை ஆனால் மிகுந்த அன்பான நண்பர்... உங்களது வாழ்த்துக்களுக்கு எனது நன்றியையும் அன்பையும் தெரிவிக்கிறேன்” என பதில் அளித்து பதிவிட்டுள்ளார்.
 

Rajni .. sir .. you give me too much credit .. I cannot compare myself to your immense presence stature and glory .. you have been not just a colleague,but a most dear friend.. your graciousness I do envelop with my gratitude and love ❤️🙏🏻🙏🏻 https://t.co/514jv8qQsB

— Amitabh Bachchan (@SrBachchan) October 11, 2022