பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட புது BTS GLIMPSE வீடியோ!
By Anand S | Galatta | October 11, 2022 18:42 PM IST

இந்திய திரையுலகின் ஆகச்சிறந்த இயக்குனரான மணிரத்னத்தின் கனவு திரைப்படமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளன. 2 பாகங்களாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வனின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸானது.
தொடர்ந்து 2வது பாகம் அடுத்த 6-9 மாதங்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், இளையதிலகம் பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நிழல்கள் ரவி, ஷோபிதா, லால், அஷ்வின் காக்கமனு, ஜெயசித்ரா, கிஷோர், அர்ஜுன் சிதம்பரம், ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அமரர் கல்கியின் அற்புதப் படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ஜெயமோகன் அவர்கள் வசனங்களை எழுத, தோட்டா தரணியின் கலை இயக்கத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
எக்கச்க்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிரம்மாண்டத்தின் உச்சமாக வெளிவந்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்று 400 கோடிக்கும மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஆடை வடிவமைப்பு குறித்து விரைவில் வெளிவர இருக்கும் BTS வீடியோவின் முன்னோட்டமாக புது BTS GLIMPSE வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோ இதோ…
Here’s a sneak peek into all the meticulous work that went on behind the stunning costumes of #PS1!
— Lyca Productions (@LycaProductions) October 11, 2022
Exclusive BTS featuring the incredible @ekalakhani - Coming Soon!#PonniyinSelvan1 🗡️ #ManiRatnam @arrahman @MadrasTalkies_ @LycaProductions @tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/R47vwtyNFz