காஃபி வித் காதல் படத்தின் பாடல்கள் வெளியீடு!
By Anand S | Galatta | October 11, 2022 20:00 PM IST

தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் இயக்குனர்களில் ஒருவராக தொடர்ந்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துவரும் இயக்குனர் சுந்தர்.சி நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில், தலைநகரம் 2 வல்லான் மற்றும் ஒன் 2 ஒன் ஆகிய திரைப்படங்கள் சுந்தர்.சி நடிப்பில் வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன.
இதனிடையே இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அடுத்து வெளிவர தயாராகியுள்ள திரைப்படம் காஃபி வித் காதல். முன்னதாக சுந்தர்.சி இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான கலகலப்பு-2 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சுந்தர்.சி - ஜீவா - ஜெய் கூட்டணி இணைந்துள்ள காஃபி வித் காதல் திரைப்படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக தயாராகியுள்ள காஃபி வித் காதல் திரைப்படத்தில் ஜீவா , ஜெய் உடன் இணைந்து DD-திவ்யதர்ஷினி, ஸ்ரீகாந்த், அமிர்தா, மாளவிகா ஷர்மா, ரைசா வில்சன், சம்யுக்தா சண்முகநாதன், ஐஸ்வர்யா தத்தா, ரெட்டின் கிங்ஸ்லி, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள காஃபி வித் காதல் திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. இந்நிலையில் காஃபி வித் காதல் திரைப்படத்திலிருந்து அனைத்து பாடல்களும் தற்போது வெளியாகியுள்ளன. அந்த பாடல்களை கீழே உள்ள லிங்கில் கேட்டு மகிழுங்கள்.
Sundar C's Coffee With Kadhal gets its new release date - big announcement made!
07/10/2022 08:20 PM