பிக்பாஸ் தமிழின் பெரிய ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றாக அவதரித்துள்ளது.விஜய் டிவியில் 2017-ல் பிக்பாஸ் ஒளிபரப்பாகி பெரிய வரவேற்பை வாங்கிய இந்த நிகழ்ச்சி பெரிய வெற்றி அடைந்தது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பிரபலங்களும் நட்சத்திரங்களாக மாறியுள்ளனர்.

ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்து ஆறாவது சீசன் அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.உலகநாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.ஜி பி முத்து,மஹேஸ்வரி,ரச்சிதா,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,மணிகண்ட ராஜேஷ்,அசல் கோலார்,ஆயிஷா உள்ளிட்ட 20 பிரபலங்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.

இந்த முறை பொதுமக்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டு தனலட்சுமி என்ற பெண் டிக்டாக் பிரபலம் கலந்துகொண்டு வருகிறார்.பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி போல இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

முதல் வாரத்திலேயே டாஸ்க்கள் கொடுத்து ஆட்டம் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது.அசல் கோலார்,ஆயிஷா  இருவரும் பேசிக்கொள்ள தன்னை வாடா,போடா என அழைக்கவேண்டாம் என சொல்ல ஆயிஷா ஒரு மூலையில் சோகமாக கண்ணீர் விடுவது போல அமர்ந்திருக்கிறார்.இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்