ஜீ தமிழில் ஒளிபரப்பாகி பல சீரியல்கள் பெரிய ஹிட் அடித்துள்ளன.அந்த தொடரில் நடித்த  நடிகர்,நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகினர்.இவர்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக இவர்களுக்கென தனியொரு ரசிகர் பட்டாளம் உருவானது.

அப்படி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் தொடர் தெய்வம் தந்த பூவே.அம்ருதகலாம் இந்த தொடரின் நாயகனாக நடித்து வருகிறார்.நிஷ்மா செங்கப்பா இந்த தொடரின் நாயகியாக நடித்து வருகிறார்.இந்த தொடரில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

மதிய நேரத்தில் ஒளிபரப்பானாலும் இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த தொடருக்கென தனியொரு ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.இந்த தொடரின் முதல் சீசன் நிறைவுக்கு வருகிறது என்றும் அடுத்த சீசன் தொடங்கவுள்ளது என்றும் தகவல் கிடைத்துள்ளது.

இரண்டாவது சீசனிலும் அம்ருதகலாம் ஹீரோவாக நடித்துள்ளார்.விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே தொடரில் ஹீரோயினாக நடித்து பிரபலமான ஸ்ரீநிதி இந்த தொடரில் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.