கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சுல்தான். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அதோடு சுல்தான் திரைப்படம் ஏப்ரல் 2-ம் தேதி ரிலீசாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெமோ திரைப்பட புகழ் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இந்த சுல்தான் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தன்னா நடித்துள்ளார். அதிரடி மாஸ் மசாலா பொழுதுப்போக்கு படமான இதில் ராமச்சந்திர ராஜு, லால் பால், நெப்போலியன் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கியமான துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

சமீபத்தில் சுல்தான் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜாவும், பாடல்களுக்கான இசையை விவேக் - மெர்வினும் அமைத்துள்ளார்கள். 

சென்சாரில் சுல்தான் படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. யாரையும் இவ்ளோ அழகா பாடலின் ப்ரோமோ காட்சி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. யோகிபாபுவின் நகைச்சுவையும், ராஷ்மிகா மற்றும் கார்த்தியின் துள்ளலான ரொமான்ஸ் காட்சிகள் ப்ரோமோவை சிறப்பிக்கிறது. 

இந்த படத்தை தொடர்ந்து கார்த்தி கைவசம் பொன்னியின் செல்வன் படம் உள்ளது.மணிரத்னம் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயம் ரவி, சியான் விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் அந்த படத்தில் நடித்து வருகின்றனர்.