தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் சிலம்பரசன் அடுத்ததாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். தொடர்ந்து பத்துதல படத்திலும் நடித்து வருகிறார் சிலம்பரசன்.

முன்னதாக பல தடைகளைத் தாண்டி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள மாநாடு திரைப்படம் இன்று (நவம்பர் 25 ஆம் தேதி) உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரித்துள்ள மாநாடு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சிலம்பரானுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா ஆகியோர் இணைந்து நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் மிரட்டலான வில்லனாக S.J.சூர்யா நடித்துள்ளார். ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவில் பிரவீன்.கே.எல் படத்தொகுப்பு செய்துள்ள மாநாடு படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மாநாடு திரைப்படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ள யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் அனைவராலும் ரசிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மாநாடு திரைப்படத்தின் OST வெளியானது. அதிரடியாக வெளியான மாநாடு படத்தின் OST இதோ…