பிரபுதேவாவின் ஃப்ளாஷ்பேக் பட அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்!
By Anand S | Galatta | November 25, 2021 17:23 PM IST
இந்திய திரையுலகமே கொண்டாடும் முன்னணி கமர்ஷியல் இயக்குனராக திகழும் பிரபுதேவா சிறந்த நடன இயக்குனராகவும் மக்களின் மனம் கவர்ந்த நடிகராகவும் தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். முன்னதாக முதல் முறை காவல்துறை அதிகாரியாக பிரபுதேவா நடித்த பொன்மாணிக்கவேல் திரைப்படம் சில தினங்களுக்கு முன் நேரடியாக டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸானது.
இதனையடுத்து பிரபுதேவாவின் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள தேள் திரைப்படம் வருகிற டிசம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. தொடர்ந்து பிரபுதேவாவின் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பஹீரா மற்றும் இயக்குனர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கத்தில் பொய்க்கால் குதிரை ஆகிய திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளிவரவுள்ளன.
அடுத்ததாக 1990 களின் இனிமையான நினைவுகளைப் பற்றிப் பேசும் படமாக தயாராகும் ஃபிளாஷ்பேக் (FLASH BACK-1990's SWEET MEMORIES) படத்தில் நடிகர் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார்.அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ்.P.பிள்ளை தயாரிப்பில், ஃபிளாஷ்பேக் படத்தை டான் சாண்டி எழுதி இயக்கியுள்ளார்.
பிரபுதேவா உடன் இணைந்து ரெஜினா கெஸன்ட்ரா கதாநாயகியாக நடிக்கும் ஃபிளாஷ்பேக் திரைப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்க, எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்ய, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். இந்நிலையில் ஃபிளாஷ்பேக் படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன்பு வெளியானது அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ...
Very much happy to reveal the Breezy FIRST LOOK of #Flashback
— ArunVijay (@arunvijayno1) November 25, 2021
Congrats to entire team@Abhishek_films_ @PDdancing @ReginaCassandra @anusuyakhasba @VijayVishwaOffi @DonSandyDir @SamCSmusic @DopYuva @Sanlokesh @moorthy_artdir @its_mebobs @shankarsathyam1 @onlynikil pic.twitter.com/AzTIGrgv3W