தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகனாகவும் திகழும் நடிகர் நானி, பிரம்மாண்ட இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த நான் ஈ படத்தின் மூலம் இந்திய அளவில் மிக பிரபலம் அடைந்தார். குறிப்பாக கேங் லீடர் மற்றும் ஜெர்ஸி திரைப்படங்களுக்கு தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

சமீபத்தில் நானி நடிப்பில் வெளிவந்த டக் ஜெகதீஷ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து பீரியட் ஆக்சன் த்ரில்லர் திரைப்படமாக நானி நடிப்பில் தயாராகியுள்ள ஷியாம் சிங்கா ராய் திரைப்படம் வருகிற டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

இயக்குனர் ராகுல் சங்கிருத்யன் இயக்கத்தில், நிஹாரிகா என்டர்டைன்மென்ட் தயாரிப்பில், உருவாகியிருக்கும் ஷியாம் சிங்கா ராய் படத்தில் ஷ்யாம் சிங்கார ராய் மற்றும் வாசு என இரண்டு கதாபாத்திரங்களில் நடிகர் நானி கதாநாயகனாக நடிக்க, சாய்பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கீர்த்தி ஷெட்டி மற்றும் மடோனா செபாஸ்டின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவில், நவீன் நூலின் படத்தொகுப்பு செய்துள்ள ஷியாம் சிங்கா ராய் படத்திற்கு மிக்கி.ஜே.மேயர் இசையமைத்துள்ளார். முன்னதாக வெளிவந்த ஷியாம் சிங்கா ராய் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஷியாம் சிங்கா ராய் படத்தின் ஏதோ ஏதோ பாடல் சற்று முன்பு வெளியானது. ரொமான்டிக்கான அந்த பாடல் வீடியோ இதோ...