கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான அரவிந்தன் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி சமீபத்தில் வெளிவந்த விருமன் திரைப்படம் வரை 25 ஆண்டுகளாக 150 படங்களுக்கு மேல் இசையமைத்து இசை ரசிகர்களின் ஃபேவரட் இசையமைப்பாளராக சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா.

தொடர்ந்து வரிசையாக தனுஷ்-செல்வராகவன் கூட்டணியில் நானே வருவேன், விஷாலின் லத்தி, இயக்குனர் ராம்-நிவின்பாலி இணைந்துள்ள புதிய படம், இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே, நடிகர் சந்தானத்தின் ஏஜென்ட் கண்ணாயிரம் ஆகிய படங்கள் யுவன் இசையில் வெளிவர உள்ளன.

தனது திரைப்பயணத்தில் 25 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ள யுவன் ஷங்கர் ராஜா நேற்று ஆகஸ்ட் 31ஆம் தேதி தனது 42வது பிறந்தநாளை கொண்டாடினார். தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பலகோடி ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து யுவன் ஷங்கர் ராஜா தனது நன்றி அறிக்கையை வெளியிட்டுள்ளார். எனது துறை துறை சார்ந்த நண்பர்கள், நல விரும்பிகள், ஊடகத்தினர், இசை நிறுவனங்கள் மற்றும் எனது அன்பான ரசிகர்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் மிக்கநன்றி... எனத் தொடங்கி தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவின் அந்த முழு நன்றி அறிக்கை இதோ…
 

pic.twitter.com/bz6zDA8sIL

— Raja yuvan (@thisisysr) September 1, 2022