மக்களின் மனம் கவர்ந்த கதாநாயகர்களில் ஒருவராக அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து வரும் தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் வாரிசு. ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் தயாரிப்பில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிடும் வாரிசு திரைப்படம் பொங்கல் வெளியிடாக வருகிற ஜனவரி 12ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தில் தளபதி விஜய்க்காக முதல்முறையாக தமன் இசையமைத்துள்ளார். இதனை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 திரைப்படத்தில் தளபதி விஜய் நடிக்க இருக்கிறார்.

ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் தளபதி 67 திரைப்படத்தின் படப்பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்ற நிலையில், அடுத்தடுத்த அட்டகாசமான அறிவிப்புகள் வாரிசு திரைப்படத்தின் ரிலீஸுக்கு பின் வெளியாகும் என மிகுந்த ஆவலோடு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதனிடையே தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் ஷாம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தளபதி விஜயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, INSPIRATION , MOTIVATION என் ஹீரோ தளபதி எனக் குறிப்பிட்டு புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இதுவரை வெளிவராத இந்த லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by SHAAM (@actor_shaam)