தன்னிகரற்ற மாஸ் ஹீரோவாக மிகப்பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தின் ஃபேவரட் கதாநாயகனாக விளங்கும் தளபதி விஜய் அடுத்த நடிக்கும் தளபதி 67 திரைப்படம் இந்திய அளவில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மாஸ்டர் - விக்ரம் படங்களின் இமாலய வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 தயாராகிறது.

சமீபத்தில் தளபதி 67 படத்தின் படப்பூஜை நடைபெற்ற நிலையில் அடுத்தடுத்த அட்டகாசமான அறிவிப்புகள் வாரிசு திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு ஜனவரி மாதத்தில் வரிசையாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வரும் ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் வெளியீடாக நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி விஜயின் வாரிசு திரைப்படமும் அஜித் குமாரின் துணிவு திரைப்படமும் ஒரே நாளில் ரிலீசாக இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் காத்திருக்கிறார்கள்.

முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜ் அவர்களின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் வம்சி பைடிப்பல்லி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் தமன் இசையில் வெளியாகியுள்ள பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வைரல் ஹிட்டடித்துள்ளன. சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற வாரிசு விசை வெளியிட்டு விழாவும் தளபதி விஜயின் பேச்சும் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளன.

முன்னதாக நேற்று டிசம்பர் 31ம் தேதி அஜித்குமாரின் துணிவு திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகிய ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் வாரிசு திரைப்படத்தின் ட்ரைலருக்காகவும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று ஜனவரி 1ம் நாள் புத்தாண்டுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் வாரிசு திரைப்படத்திலிருந்து மாஸான புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. அந்த போஸ்டர் இதோ…
 

Team #Varisu wishes everyone a Happy new year nanba ❤️
Let the countdown begin for THE BOSS to return 🔥#Thalapathy @actorvijay sir @directorvamshi @MusicThaman @iamRashmika @7screenstudio @TSeries #BhushanKumar #KrishanKumar #ShivChanana #VarisuPongal #HappyNewYear2023 pic.twitter.com/RblE9QQqLH

— Sri Venkateswara Creations (@SVC_official) December 31, 2022