தமிழ் திரை உலகின் மிக முக்கிய தயாரிப்பு நிறுவனமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் அடுத்ததாக மாமன்னன் திரைப்படம் வெளிவர தயாராகி வருகிறது. தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் விநியோகஸ்தராகவும் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் தொடர்ந்து தரமான படைப்புகளை உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கி வருகிறார்.

அந்த வகையில் கடந்த ஆண்டில்(2022) FIR, எதற்கும் துணிந்தவன் ராதே ஷ்யாம், பீஸ்ட், காத்து வாக்குல ரெண்டு காதல், டான், நெஞ்சுக்கு நீதி, விக்ரம், ராக்கெட்ரி-நம்பி விளைவு, குலுகுலு, திருச்சிற்றம்பலம், டைரி, கோப்ரா, கேப்டன், ரெண்டு தணிந்தது காடு, பொன்னியின் செல்வன்-1, சர்தார், காபி வித் காதல், லவ் டுடே, கட்டா குஸ்தி ஆகிய படங்கள் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் வெளியிடப்பட்டன. 

தொடர்ந்து 2023 ஆம் ஆண்டில்(2023) அஜித் குமாரின் துணிவு தனுஷின் வாத்தி மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய படங்கள் ரெட் ஜெயண்ட் சார்பில் வெளியாக உள்ளன. இந்த வரிசையில் பிக் பாஸ் கவின் கதாநாயகனாக நடித்துள்ள டாடா படமும் தற்போது இணைந்துள்ளது. அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஊர்க்குருவி திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் கவின், முன்னதாக இயக்குனர் கணேஷ்.கே.பாபு இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் டாடா.

அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடித்துள்ள டாடா படத்தில் இயக்குனர் கே.பாக்கியராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவீஸ் சார்பில் S.அம்பேத் குமார் தயாரித்துள்ள டாடா திரைப்படத்திற்கு எழில் அரசு.K ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். 

சமீபத்தில் டாடா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைடைந்து இறுதி கட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கவினின் டாடா திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Happy & honored to announce our association with @RedGiantMovies_ for #Dada :) My heartfelt gratitude to everyone who stood by me without any expectation in return!
Happy new year, everyone! Here’s to a fresh start, new opportunities and all of your heart’s desires 🤍 pic.twitter.com/93mgkpa0DF

— Kavin (@Kavin_m_0431) January 1, 2023