என்றென்றும் இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராகவும் ஈடு இணையற்ற உச்ச நட்சத்திரமாகவும் ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் முன்னதாக நடித்த பாபா திரைப்படம் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி அவரது பிறந்த நாளை முன்னிட்டு நவீன தொழில்நுட்பத்தில் மீண்டும் ரீ-ரிலீஸாகி மக்களை மகிழ்வித்தது. தொடர்ந்து அடுத்தடுத்து லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இரண்டு படங்களில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.

அதில் முதலாவதாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து நடிக்கும் கிரிக்கெட்டை மையப்படுத்திய ஸ்போர்ட்ஸ் படமான லால் சலாம் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கியமான கௌரவ வேடத்தில் நடிக்க இருக்கிறார். முன்னதாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படையப்பா படத்திற்கு பிறகு நடிகை ரம்யா கிருஷ்ணன் சூப்பர் ஸ்டாருடன் இணைந்திருக்கும் ஜெயிலர் படத்தில் முன்னணி கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், வசந்த் ரவி, மலையாள நடிகர் விநாயகன் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது தனது ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது போயஸ் கார்டன் இல்லத்தின் வெளியில் காத்திருந்த ரசிகர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ரசிகர்களோடு தனது புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். ட்ரெண்டாகும் அந்த வீடியோ இதோ…
 

தனது வீட்டின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு, புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 🥳❤️#Superstar @rajinikanth #Jailer #HappyNewYear #NewYear #Rajinikanth pic.twitter.com/NZw7VcB8IV

— Galatta Media (@galattadotcom) January 1, 2023