விஜய் டிவியில் ஒளிபரப்பாகி செம ஹிட் அடித்த சீரியல்களில் ஒன்று ராஜா ராணி.இந்த தொடரின் இரண்டாவது சீசன் விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.சித்து இந்த தொடரின் நாயகனாக நடித்து அசத்தி வருகிறார்.இந்த தொடரின் நாயகியாக முதலில் ஆல்யா மானசா நடித்து வந்தார் பின்னர் சில காரணங்களால் இவர் விலக ரியா விஸ்வநாதன் இந்த தொடரின் நாயகியாக நடித்து வருகிறார்.

ப்ரவீனா,சைவம் ரவி,பாலாஜி,அர்ச்சனா,வைஷு சுந்தர்,நவ்யா சுஜி,நிஹாரிகா,பிரத்து என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து இந்த தொடரில் நடித்து வருகின்றனர்.இந்த தொடருக்கென தனியொரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.

முக்கிய கதாபாத்திரம் மாற்றப்பட்டாலும் கதையின் விறுவிறுப்பு குறையாமல் சீரியல் குழுவினர் பார்த்துக்கொண்டுள்ளனர்.450 எபிசோடுகளை நெருங்கி விஜய் டிவியின் மற்றுமொரு சூப்பர்ஹிட் தொடராக இந்த தொடர் அவதரித்துள்ளது.

பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் சென்று வரும் இந்த தொடரில் தற்போது பிரபல சீரியல் நடிகை புது என்ட்ரியாக இணைந்துள்ளார்.இவரது எபிசோடுகள் தற்போது ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.இதுகுறித்த ப்ரோமோ வீடியோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளனர்.