காதலித்து திருமணம் செய்துக்கொண்டு 10 மாதங்கள்  ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து குடும்பம் நடத்திய பெண் ஒருவர், “எனது கணவன் ஒரு பெண்” என்று, குற்றம்சாட்டி உள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தோனோஷியா நாட்டில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, இந்தோனோஷியா நாட்டின் ஜாம்போ பகுதியைச் சேர்ந்த 22 வயதான பெண் ஒருவர், எந்நேரமும் சோசியில் மீடியாவில் மூழ்கி கிடந்து உள்ளார்.

அப்போது, ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் அந்த பெண் ஒரு இளைஞனுடன் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் முதல் பேசி பழகி வந்திருக்கிறார்.

அப்போது, டேட்டிங் ஆப் மூலம் அறிமுகம் ஆன அந்த ஆண், “நான் அறுவை சிகிச்சை நிபுணர்” என்று, தன்னை அவர் அறிமுகம் செய்திக்கொண்டிருக்கிறார்.

அத்துடன், “நிலக்கரி வியாபாரம் செய்யும் பிசினஸ் மேனாக இருப்பதாகவும்” அந்த நபர், அந்த பெண்ணிடம் தன்னை அறிமுகம் செய்திருக்கிறார்.

அது முதல், அவர்கள் இருவரும் டேட்டிங் ஆப் மூலம் நெருங்கிப் பழகி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் இருவரும் தங்களது செல்போன் நம்பரை பகிர்ந்துகொண்டு, மேலும் நெருக்கமாகி உள்ளனர்.

அதன்படி, அடுத்த 3 மாதங்களிலேயே அவர்கள் இருவரும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு, கடந்த 10 மாதங்களாக தனியாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். 

அதன்படி, ரகசிய திருமணத்திற்குப் பிறகு, முதலில் அந்த பெண்ணின் வீட்டிலேயே அந்த ஆணும் தங்கி இருவரும் புதுமணத் தம்பதிகளாக வசித்து வந்திருக்கிறார்கள்.

அத்துடன், இவர்களது திருமணத்தை பதிவு செய்வதற்காக, அந்த நபர் எந்த ஆவணமும் கொடுக்காமல் தொடர்ச்சியாக காலம் தாழ்த்தி வந்திருக்கிறார். 

இதனால், ஒரு கட்டத்தில் அந்த நபர் மீது அந்த பெண்ணின் பெற்றோருக்கு சற்று சந்தேகம் எழுந்திருக்கிறது. இதன் காரணமாக, சுதாரித்துக்கொண்ட அவர் தனது மனைவியை அழைத்துக்கொண்டு, தெற்கு சுமத்ராவுக்கு தனியாக குடிபெயர்ந்திருக்கிறார்.

அங்கு, குடித்தனம் நடத்தத் தொடங்கியது முதல், தனது மனைவியை அவரது பெற்றோர் உள்ளிட்ட எவரிடமும் பேசவிடாமல் அவரை வீட்டின் உள்ளே வைத்து அடைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், தான் ஒரு தொழிலதிபராக இருந்தும், மனைவியின் பெற்றோரிடம் இருந்து அடிக்கடி செலவுக்கு பணத்தையும் வாங்கியிருக்கிறார். இப்படியாக, 15 லட்ச ரூபாய் அளவுக்கு அந்த நபர், மனைவியின் வீட்டில் இருந்து பணம் பெற்றிருக்கிறார்.

ஒரு கட்டத்தில், “தங்களது மகள் எங்கு இருக்கிறார்?” என்ற விபரம் கூட தெரியாமல் அந்த அந்த பெண்ணின் பெற்றோர் தவித்து உள்ளனர்.

இதனால், அந்த நபர் குறித்து இன்னும் சந்தேகம் அதிகரிக்கவே, அங்குள்ள ஜாம்பி போலீசாரிடம் புகார் அளித்த பெண்ணின் பெற்றோர், போலீசாரின் உதவியுடன் அந்த பெண் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை பத்திரமாக மீட்டு உள்ளனர்.

இந்த நிலையில் தான், “கடந்த 10 மாதங்களாக கணவனாக கருதப்பட்டவர் ஆண் இல்லை, அவர் உண்மையில் ஒரு பெண் என்பது” என்பதை, பாதிக்கப்பட்ட அவரது மனைவியிடம் போலீசார் விசாரித்து உண்மையான தகவலை கூறியிருக்கிறார்கள்.

மேலும், மோசடி செய்த அந்த நபரின் கல்விச் சான்றிதழ்களும் போலியானது என்றும், போலீசார் கண்டுப்பிடித்து உள்ளனர்.

இச்சம்பவம், இந்தோனேஷியா நாட்டில் பெரும் பரபரப்பையும், கடும் அதிர்ச்சிகளையும் ஏற்படுத்தி உள்ளது.