நமது இந்திய ராணுவத்தில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம். 

- இந்தியா சுமார் 33 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட உலகின் மிகப்பெரிய நாடாகும்.

- இதில், இந்தியா உலகிலேயே சீனாவுக்கு சரிக்கு சமமான அளவில் அதிகபட்ச மக்கள் தொகை கொண்ட நாடுகளாக சம அளவு பலத்துடன் திகழ்கிறது.

- உலகிலேயே ராணுவ பலத்தில் இந்தியா 4 வது பலம் வாய்ந்த நாடாக திகழ்கிறது.

- அதாவது, உலகின் பலம் வாய்ந்த ராணுவ வல்லரசுகளில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக 4 வது இடத்தில் இந்தியா திகழ்கிறது.

- இந்தியா, தனது ராணுவத்திற்காக ஆண்டுக்கு 4 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கிறது.

- ராணுவ வீரர்களின் எண்ணிக்கையைப் பொருத்த வரை, 21 லட்சத்து 85 ஆயிரம் பேரைக் கொண்ட சீனாவுக்கு அடுத்தபடியாக 14 லட்சத்து 55 ஆயிரம் வீரர்களைக் கொண்டு இந்தியா 2 வது இடத்தில் இருக்கிறது.

- இந்தியாவில் 4,426 ராணுவ டாங்கிகளும், 5681 கவச வாகனங்களும்,  5067 பீரங்கிகளும், 290 தானியங்கி பீரங்கிகளும் உள்ளன. 

- அந்த வகையில், இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பைப் பொருத்தவரை கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான புள்ளி விவரங்கள் கடந்த 2020 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன. 

- அதன்படி, தமிழ்நாடு ஒட்டுமொத்த எண்ணிக்கையில் இந்திய அளவில் 12 ஆம் இடத்தில் இருக்கிறது.

- அந்த வகையில் இந்திய ராணுவத்தில், முதலிடத்தில் உத்தரப் பிரதேசம் உள்ளது.

- கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான கடந்த 3 ஆண்டுகளில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து மட்டும் 18 ஆயிரத்து 906 பேர் நமது இந்திய ராணுவத்தில் உள்ளனர்.

- அடுத்த இடத்தில் பஞ்சாப் மற்றும் சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அதன்படி, 15 ஆயிரத்து 455 பேர் உள்ளனர்.

- 4 வது இடத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 13 ஆயிரத்து 128 பேர் நமது இந்திய ராணுவ பணியில் உள்ளனர்.

- அதே போல் 5 வது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்களில் குறிப்பிட்ட இந்த 3 ஆண்டுகளில் 11 ஆயிரத்து 866 பேர் இருக்கிறார்கள்.

- அந்த வரிசையில் தமிழ்நாடு 12 வது இடத்தில் உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை குறிப்பிட்ட இந்த 3 ஆண்டுகளில் 5 ஆயிரத்து 300 பேர் நமது இந்திய ராணுவத்தில் உள்ளனர்.

- தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக கர்நாடகா, லட்சத்தீவு பிராந்தியத்தில் 4267 பேர் இருக்கிறார்கள்.

- ஆந்திராவில் 4 ஆயிரத்து 121 பேரும் நமது இந்திய ராணுவத்தில் பணியில் சேர்ந்து உள்ளனர்.

- அதே போல், கேரளாவில் இருந்து 3 ஆயிரத்து 727 பேர் ராணுவத்தில் உள்ளனர்.

- முக்கியமாக, தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள அக்னிபத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், நமது இந்திய ராணுவ வீரர்களின் தற்போதைய சராசரி வயது 32 ல் இருந்து, அடுத்த 8 ஆண்டுகளில் 26 ஆக குறைந்து, நமது இந்திய ராணுவம் இன்னும் இளமைத் துடிப்புடன் இருக்கும் என்று,  பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

இதனிடையே, இந்தியா - சீனா ஆகிய இரண்டு நாடுகளுமே, உலகின் மிகப்பெரிய ராணுவ பலத்தைக் கொண்டுள்ள நாடுகளாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.