துணிவு.. வாரிசு.. யார் REAL WINNER? - ரோகினி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் விளக்கம்.. முழு வீடியோ இதோ..

வாரிசு, துணிவு வசூல் குறித்து ரோகினி திரையரங்க உரிமையாளர் விளக்கம் - Rohini theatre owner rheventh about thunivu, varisu collection | Galatta

உச்ச நட்சத்திரங்களின் படங்களின் கொண்டாட்டம் என்றாலே அது ரோகினி திரையரங்கம் தான் ரசிகர்களின் ஆரவாரமான கொண்டாட்டங்களுடன் திரையரங்கம் அதிர குதூகலிக்கும் இடமாக சென்னை ரோகினி திரையரங்கம் இருந்து வருகிறது. ரசிகர்களின் கொண்டாட்டங்களுடன் படம் பார்க்கவே ரசிகர்களோடு பல நட்சத்திரங்களும் சேர்ந்து படம் பார்ப்பது வழக்கம். அதுவும் குறிப்பாக முதல் நாள் முதல் காட்சி. ஆடல் பாடலுடன் திருவிழாவை மிஞ்சும் கொண்டாட்டங்களை  கொடுக்கும் தளமாக ரசிகர்களுக்கு இருந்து வரும் ரோகினி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் நமது கலாட்டா தமிழ் மீடியா பேட்டியில் கலந்து கொண்டார். இதில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் மற்றும் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின்  வசூல் மற்றும் தற்போதையை நிலை, ரசிகர்களின் கொண்டாட்டங்கள் குறித்து பல தகவல்களை பகிர்ந்தார்.  

இதில் தற்போது வாரிசு மற்றும் துணிவு திறப்படங்களில் எந்த திரைப்படம் ரோஹினியில் வெற்றிபெற்றது? வசூல் நிலவரம் என்ன என்ற கேள்விக்கு,

அவர், “யார் வெற்றி பெற்றார் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது. இரண்டு படங்களும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. வசூல் அடிப்படையில் இப்போதைக்கு வாரிசு முன்னிலையில் உள்ளது. இதுகுறித்து இரண்டாம் வாரத்தின் நிலையை  அதிகாரபூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளோம். முதல் நாளில் இரண்டு படங்களும் சரி சமமாக போனது இரண்டாவது நாளில் துணிவு திரைப்படத்திற்கு நுனியளவு வித்யாசம் ஏற்பட்டது. போக போக வாரிசு திரைப்படம் அதிகமா வரவேற்பு கிடைத்தது. குடும்பங்கள் கூட்டமாக 20, 30 பேர் வருவதால் இப்படி ஆனது. இரண்டு படங்களுக்கும் சமமான காட்சிகள் தான் கொடுத்துள்ளோம்.” என்றார்.

#Varisu takes a lead in week 2 at #FansFortRohini & #Thunivu at 2nd place by a slender thin margin.#WaltairVeeraya & #VeeraSimhaaReddy stands on 3rd and 4th respectivley.#RohiniWeeklyBoxOffice pic.twitter.com/PhROkHTFy3

— Rohini SilverScreens (@RohiniSilverScr) January 19, 2023

மற்றும் வருங்காலங்களில் முதல் நாள் முதல் காட்சி மற்றும் ரசிகர்களின் கொண்டாட்ட நேரங்கள் ரத்து செய்யப்படுமா? என்ற கேள்விக்கு, அவர், "கொண்டாட்டங்கள் சந்தோஷமா இருந்து, யாருக்கும் எதும் ஆகாமல் இருந்தால் ஓகே! அதையும் மீறி எதவாது அசம்பாவிதம் நேர்ந்தா fdfs க்கு அரசும் அனுமதி தரமாட்டார்கள், போலீஸ் அனுமதியும் கிடைக்காது. அதனால் ரத்து செய்யக்கூடிய நிலை வந்துவிடும்" என்றார்.

மேலும் துணிவு மற்றும் வாரிசு திரைப்படம் குறித்தும் பார்வையாளர்களின் தற்போதைய நிலை குறித்தும் ரோகினி திரையரங்க உரிமையாளர் பகிர்து கொண்ட முழு வீடியோ இதோ..

 

“விஜய் சேதுபதி படங்களை நான் ரீமேக் செய்ய மாட்டேன்..” – ஃபர்ஸி கதாநாயகன் ஷாகித் கபூர் பதில்..
சினிமா

“விஜய் சேதுபதி படங்களை நான் ரீமேக் செய்ய மாட்டேன்..” – ஃபர்ஸி கதாநாயகன் ஷாகித் கபூர் பதில்..

“விஜயகாந்த் அவருக்கு வந்த படங்களை எனக்கு கொடுத்திருக்கிறார்”- நெகிழ்ந்த சரத்குமார்.. முழு வீடியோ இதோ..
சினிமா

“விஜயகாந்த் அவருக்கு வந்த படங்களை எனக்கு கொடுத்திருக்கிறார்”- நெகிழ்ந்த சரத்குமார்.. முழு வீடியோ இதோ..

'ஹெலிகாப்டர் சேஸிங்..' துணிவு படத்தோட இன்னொரு கிளைமேக்ஸ் - சுப்ரீம் சுந்தர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..
சினிமா

'ஹெலிகாப்டர் சேஸிங்..' துணிவு படத்தோட இன்னொரு கிளைமேக்ஸ் - சுப்ரீம் சுந்தர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..