எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. பிக்பாஸ் 6 அட்டகாசமான அப்டேட் – உற்சாகத்தில் ரசிகர்கள்.. முழு விவரம் இதோ!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் grand finale அப்டேட் - here is bigg boss season 6 Grand Finale update | Galatta

இந்தியாவில் மிகவும் பிரபலமான நிகழ்சிகளில் ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்தியில் பிரபலமான இந்த நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் 2017 ல் துவங்கப்பட்டது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சியை உச்சநட்சத்திரமான கமல் ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர்.  இந்த நிகழ்ச்சி இன்றும் பிரபலமாய் பேசப்படுவதற்கு காரணம் கமல் ஹாசன் என்றே சொல்லலாம். அவரது நேர்த்தியான கேள்விகளுக்கும் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் விதத்திற்கும் ஏரளாமான ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இருந்து வருகின்றனர்.

இதுவரை வந்த ஆறு சீசன்களில் மிகவும் பிரபலமான சீசன் என்றால் அது முதல் சீசன் தான். புதிய கான்செப்ட் என்பதாலும் பார்க்காத ஒன்றை பார்க்க போகிறோம் என்ற ஆவலும் இந்த சீசனை மேலும் சுவரச்யாமான சீசனாக மாற்றியது. முதல் சீசனில் பிக் பாஸ் டைட்டிலை வென்றது ஆரவ். மற்றும் இரண்டாம் இடத்தில் கவிஞர் சினேகன் வென்றார். அதன் பின் இரண்டாவது சீசனில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய 4 போட்டியாளர்களும் பெண்கள் என்பதால் இந்நிகழ்ச்சியினை மேலும் பிரபலமாக்கியது. இரண்டாவது சீசனில் டைட்டிலை நடிகை ரித்விகா வென்றார். பின் 3 வது சீசனில் மலேசியா நாட்டு பாடகர் முகேவ் ராவ் பட்டத்தை வென்றார். பிரபல டான்ஸ் மாஸ்டர் சாண்டி இரண்டாம் இடம் பிடித்தார். ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீசனாக இன்றும் இருந்து வருகிறது.அதன் பின் நான்காவது சீசனில் பிரபல நடிகர் ஆரி அர்ஜுனா வெற்றி பெற்றார். கடந்த 2021 ல் நடைபெற்ற ஐந்தாவது சீசனில் டைட்டில் வென்றார் ராஜு மோகன்.

வெறும் சீசன் மட்டுமல்லாமல் மேலும் ஒரு புதிய யுக்தியை கையிலெடுத்தத்து பிக்பாஸ் குழு. பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் இதுவரை ஐந்து சீசனில் அதிகமாக பேசப்பட்ட போட்டியாளர்களை தேர்வு செய்து நிகழ்ச்சியை தொடங்கியது. இந்நிகழ்ச்சி 24 மணி நேரம் நேரலையில் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு செய்தது. கமல் ஹாசன் ஆரம்பத்தில் தொடங்கி வைக்க பிரபல நடிகர் சிம்பு நிகழ்சியை தொடர்ந்தார்.  இந்நிகழ்ச்சியில் டைட்டிலை பாலா முருகதாஸ் வென்றார்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6 கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கியது. 24 மணி நேர நேரலையில் தொடங்கப்படவுள்ள இந்த சீசனை உலகநாயகன் பிரம்மாண்டமாக தொகுத்து வழங்கி வருகிறார்.  முதல் முதலாக இந்த சீசனில் சாமனிய மனிதர்கள் பங்கு பெற்றனர். 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 6 ல் விக்ரமன், அசீம், ஷிவின், அமுதவாணன், மைனா நந்தினி, vj கதிரவன் ஆகிய 6 போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்நிகழ்ச்சியின் கடைசி வாரமான தற்போது VJ கதிரவன் 3 லட்சம் பண மூட்டையை எடுத்துக் கொண்டு வாரத்தின் முதல் நாளிலே போட்டியிலிருந்து வெளியேறினார் . அதனை யடுத்து பிக்பாஸ் தமிழ் வரலாற்றிலே முதல் முதலாக இரண்டாவது முறையாக வெளியேறுவதற்கான பணம் வைக்கப்பட்டது. யாரும் எதிர்பார்க்காத வகையில் அமுதவாணன் 13 லட்சத்துடன் போட்டியிலிருந்து வெளியேறினார். இந்நிகழ்ச்சியில் அமுதவாணன் தான் முதல் இறுதி சுற்றுக்கு சென்ற போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் அதே நாளில் அதிரடி திருப்பங்களுடன் மைனா நந்தினி  வாராத்தின் இடையிலே வாக்கு அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ளார். தற்போது  விக்ரமன், அசீம், ஷிவின் ஆகிய மூன்று போட்டியாளர்கள் இறுதிகட்ட மேடையில் இருக்கின்றனர்.  இதில் ஷிவின் சாமானிய மனிதரில் இருந்து தேர்வு செயப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சீசனுக்கான இறுதி வாக்களிப்பு நேற்று இரவோடு முடிவடைந்துள்ளது. இதுவரை நடந்த சீசன்களில் பார்வையாளர்களுக்கு வெற்றியாளர் குறித்த யூகம் இருந்தது. இந்த சீசனில் இறுதி போட்டிக்குள் நுழைந்த மூவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை. மூவருக்கும் சமமான ரசிகர்கள் இருகின்றனர்.அதனால் யார் வெற்றியாளர் என்பதை யூகிக்க முடியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் தான் தொடக்கம் முதல் இறுதி வரையில் போட்டியாளர்கள் மக்களை பரபரப்பிலேயே வைத்துள்ளனர்.  எந்தவகையிலும் இந்த சீசன் சுவாரஸ்யம் சற்றும் குறையாமல் வெற்றி நிகழ்ச்சியாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் இறுதி மேடையில் ஏறப்போகும்  அந்த இரண்டு போட்டியாளர்கள் யார்? யார் பிக்பாஸ் சீசன் 6 க்கான டைட்டில் வின்னர்? என்ற கேள்விக்கு விடை நாளை மாலை 6 மணிக்கு தெரிந்து விடும். நாளை மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை தொடர் நிகழ்ச்சியாக பிரம்மாண்ட ‘பிக் பாஸ் சீசன் 6 கிராண்ட் பினாலே’ விஜய் தொலைக்காட்சியிலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரிலும் ஒளிபரப்பாகவுள்ளது. மக்கள் வாக்குகளை பெற்று வெற்றியாளராக அந்த பிரம்மாண்ட மேடையை அலங்கரிக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு நாளை ஒளிப்பரப்பாகவுள்ள பிரம்மாண்ட நிகழ்ச்சியில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த நிகழ்ச்சியின் பிரபல வாசகமான எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற அடிப்படையிலே இந்த நிகழ்ச்சியும் இதுவரை நடந்து வருகிறது.இறுதி மேடையிலும் அப்படி ஏதாவது நிகழுமா என்று மக்கள் ஆவலுடன் உள்ளனர்.

“விஜயகாந்த் அவருக்கு வந்த படங்களை எனக்கு கொடுத்திருக்கிறார்”- நெகிழ்ந்த சரத்குமார்.. முழு வீடியோ இதோ..
சினிமா

“விஜயகாந்த் அவருக்கு வந்த படங்களை எனக்கு கொடுத்திருக்கிறார்”- நெகிழ்ந்த சரத்குமார்.. முழு வீடியோ இதோ..

'ஹெலிகாப்டர் சேஸிங்..' துணிவு படத்தோட இன்னொரு கிளைமேக்ஸ் - சுப்ரீம் சுந்தர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..
சினிமா

'ஹெலிகாப்டர் சேஸிங்..' துணிவு படத்தோட இன்னொரு கிளைமேக்ஸ் - சுப்ரீம் சுந்தர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..

சூரரைப் போற்று நடிகை அபர்ணா பாலமுரளியிடம் அத்து மிறீய மாணவர்.. படக்குழு அதிர்ச்சி - வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

சூரரைப் போற்று நடிகை அபர்ணா பாலமுரளியிடம் அத்து மிறீய மாணவர்.. படக்குழு அதிர்ச்சி - வைரலாகும் வீடியோ இதோ..