முற்றிலும் புதிய பரிமாணத்தில் யோகி பாபு - பா.ரஞ்சித்துடன் இணைந்த புதிய படத்தின் அட்டகாசமான GLIMPSE இதோ!

யோகி பாபுவின் பொம்மை நாயகி பட கடற்கரை காத்து பாடல்,pa ranjith yogi babu in bommai nayagi movie kadar kara kaathu song out now | Galatta

தமிழ் திரையுலகின் நட்சத்திர நகைச்சுவை நடிகராக முன்னணி நட்சத்திர நாயகர்கள் அனைவருடனும் இணைந்து நகைச்சுவையில் கலக்கி வரும் யோகி பாபு, கடந்த சில தினங்களுக்கு முன்பு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள வாரிசு திரைப்படத்திலும் காமெடியில் அசத்தியிருக்கிறார். பக்கா எமோஷன் - ஆக்சன் என நகரும் வாரிசு திரைப்படத்தில் அங்கங்கே கலகலப்பூட்டி ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார் யோகி பாபு.

தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர், சிவகார்த்திகேயனின் அயலான், அரவிந்த் சுவாமியின் சதுரங்க வேட்டை 2, பிரசாந்தின் அந்தகன் உள்ளிட்ட படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். முன்னதாக காசேதான் கடவுளடா, சலூன், பூச்சாண்டி பூமர் அங்கிள் மற்றும் மெடிக்கல் மிராக்கள் ஆகிய படங்கள் யோகி பாபு நடிப்பில் விரைவில் வெளிவர தயாராகி வருகின்றன.

இதனிடையே தனது நகைச்சுவை கதாபாத்திரத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு அழுத்தமான கதாபாத்திரத்தில் களமிறங்கி இருக்கும் யோகி பாபு நடிப்பில் தயாராகி உள்ள திரைப்படம் பொம்மை நாயகி. அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகி பாபு உடன் இணைந்து சுபத்ரா மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் பொம்மை நாயகி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து வழங்கும் பொம்மை நாயகி படத்திற்கு அதிசயராஜ் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்ய, சுந்தரமூர்த்தி.K.S இசையமைத்துள்ளார். பொம்மை நாயகி திரைப்படம் வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. 

இந்நிலையில் பொம்மை நாயகி படத்தில் இருந்து கடற்கரை காத்து பாடல் தற்போது வெளியானது. இந்தப் பாடலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரி கம பா நிகழ்ச்சியில் மக்களின் மனதை வென்ற ராக்ஸ்டார் ரமணி அம்மாள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கவனத்தை ஈர்க்கும் கடற்கரை காத்து பாடல் இதோ… 
 

Hatrickக்கு தயாராகும் வெற்றி கூட்டணி... சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணையும் விஷ்ணு விஷாலின் அடுத்த அதிரடி படம்! அட்டகாசமான அறிவிப்பு
சினிமா

Hatrickக்கு தயாராகும் வெற்றி கூட்டணி... சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணையும் விஷ்ணு விஷாலின் அடுத்த அதிரடி படம்! அட்டகாசமான அறிவிப்பு

சேதுபதி படத்துல நல்ல போலீஸ்... இதுல எப்படி? முதல் அதிரடி வெப் சீரிஸ் குறித்து மனம்திறந்த விஜய் சேதுபதி! வீடியோ இதோ
சினிமா

சேதுபதி படத்துல நல்ல போலீஸ்... இதுல எப்படி? முதல் அதிரடி வெப் சீரிஸ் குறித்து மனம்திறந்த விஜய் சேதுபதி! வீடியோ இதோ

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மாஸான முதல் ஆக்ஷன் வெப் சீரிஸ்... அதிரடியான புது GLIMPSE இதோ!
சினிமா

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மாஸான முதல் ஆக்ஷன் வெப் சீரிஸ்... அதிரடியான புது GLIMPSE இதோ!