"வசூல் சக்கரவர்த்தி தளபதி விஜய் தான்"- பாக்ஸ் ஆபிஸை அதிரவிடும் வாரிசு! வேற லெவல் அறிவிப்பு இதோ

தளபதி விஜயின் வாரிசு படத்தின் UK BOX OFFICE வசூல் நிலவரம்,thalapathy Vijay in varisu has set a record at the uk box office | Galatta

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஆளுமையாகவும் உயர்ந்துள்ள தளபதி விஜய், அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். விக்ரம் படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகும் தளபதி 67 திரைப்படம், இந்திய சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் தளபதி 67 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வாரிசு திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு வெளிவரும் என முன்பே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், வருகிற ஜனவரி 26-ஆம் தேதி தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வீடியோ வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

முதல்முறையாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில், தயாரிப்பாளர் தில் ராஜு அவர்களின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டது. அனைத்து வயது ரசிகர்களும் விரும்பும் பக்கா ஃபேமிலி என்டர்டைனர் திரைப்படமாக வாரிசு திரைப்படத்தை ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக கொண்டாடி வருகின்றனர்.

முன்னதாக வாரிசு திரைப்படத்தின் மீது பலவிதமான எதிர்மறை விமர்சனங்களை முன் நிறுத்தி இந்த முறை பாக்ஸ் ஆபிஸில் விஜய் திரைப்படம் மிகப்பெரிய வசூல் செய்ய வாய்ப்பே இல்லை என சொல்லப்பட்ட நிலையில், அந்த எதிர்மறை விமர்சனங்களை தவிடு பொடியாக்கி தற்போது உலக அளவில் வாரிசு திரைப்படம் 210 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. அதிலும் குறிப்பாக UK-வில் 750000 பவுண்டுகள் வசூலித்துள்ளதாக அஹிம்ஷா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. 

இதுவரை UK-வில் வெளியான தமிழ் திரைப்படங்களிலேயே இது 4வது அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் வரும் தினங்களிலும் தொடர்ந்து வாரிசு திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடும் பட்சத்தில் UK-வில் ஆல் டைம் ரெக்கார்டாக சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தளபதி விஜய் எப்போதும் வசூல் சக்கரவர்த்தி தான் என நிரூபிக்கப்பட்டுள்ள இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ…
 

Hold on to your seats, #ThalapathyVijay fans! The record-breaking success of #Varisu & #Vaarasadu continues as it crosses the £750k mark at the UK box office, securing its spot as the current 4th highest grossing Tamil film of all time! 🙌🔥 pic.twitter.com/SjkivefOoe

— Ahimsa Entertainment (@ahimsafilms) January 20, 2023

சேதுபதி படத்துல நல்ல போலீஸ்... இதுல எப்படி? முதல் அதிரடி வெப் சீரிஸ் குறித்து மனம்திறந்த விஜய் சேதுபதி! வீடியோ இதோ
சினிமா

சேதுபதி படத்துல நல்ல போலீஸ்... இதுல எப்படி? முதல் அதிரடி வெப் சீரிஸ் குறித்து மனம்திறந்த விஜய் சேதுபதி! வீடியோ இதோ

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மாஸான முதல் ஆக்ஷன் வெப் சீரிஸ்... அதிரடியான புது GLIMPSE இதோ!
சினிமா

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மாஸான முதல் ஆக்ஷன் வெப் சீரிஸ்... அதிரடியான புது GLIMPSE இதோ!

2023ல் ரசிகர்களுக்கு பக்கா விருந்து... இந்தியன்2, தளபதி67, AK62 படங்களின் ரிலீஸ் குறித்த அட்டகாசமான தகவல் இதோ!
சினிமா

2023ல் ரசிகர்களுக்கு பக்கா விருந்து... இந்தியன்2, தளபதி67, AK62 படங்களின் ரிலீஸ் குறித்த அட்டகாசமான தகவல் இதோ!