“விஜயகாந்த் அவருக்கு வந்த படங்களை எனக்கு கொடுத்திருக்கிறார்”- நெகிழ்ந்த சரத்குமார்.. முழு வீடியோ இதோ..

விஜயகாந்த் குறித்து நடிகர் சரத்குமார் நெகிழ்ச்சி - Actor sarath kumar about actor Vijayakanth emotional speech | Galatta

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் சரத்குமார். 80 களின் பிற்பகுதியில் வில்லனாக அறிமுகமாகி விஜய் காந்த்தின் ‘புலன் விசாரணை படத்தில் வில்லனாக நடித்து பிரபலமடைந்தவர் சரத்குமார். பின் தன் நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவின் கவனம் பெற்று ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்கள் வரிசையில் சரத்குமாரும் இணைந்தார். கிட்டதட்ட பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. குறிப்பாக சரத்குமார் படங்களான 'சூரிய வம்சம்', 'நாட்டாமை' போன்ற படங்களுக்கு இன்றும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. கலைத்துறையில் மட்டுமல்லாமல் அரசியல் துறையில் சிறந்து விளங்கி வரும் சரத்குமார் தற்போது நிறைய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்று வருகிறார்.

குறிப்பாக கடந்த ஆண்டு இந்திய அளவு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் பெரிய பழுவேட்டையராக நடித்து கவனம் பெற்றார் சரத்குமார். தற்போது சரத்குமார் தி ஸ்மைல் மேன், பரம்பொருள் நிறங்கள் மூன்று ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சரத்குமார் அவர்கள் கலாட்டா தமிழ் பிரத்யேக பேட்டியில் கலந்து கொண்டார். இதில் அவர் கடந்து வந்த திரைப்பயணங்கள், வாரிசு படத்தில் நடித்த அனுபவம் போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இதில் இந்த தலைமுறையினர் விஜய் - அஜித் படங்களின் போட்டியை பார்த்து வருகிறோம். உங்கள் தலைமுறையில் ரஜினி கமல் படங்களின் போட்டியை எப்படி பார்த்தீர்கள்? ஒரே நேரத்தில் பல படங்கள் வெளியாகும் சூழல் அன்று எப்படி இருந்தது? என்ற கேள்விக்கு அவர்,

“நானே தீவர எம்.ஜி.ஆர் ரசிகன், சிவாஜி சார் படங்களே தங்கபதக்கம் பின்பு தான் பார்க்க ஆரம்பித்தேன். அப்படி இரண்டு படங்கள் வெளியாகும் போது எங்க தலைவன் படம் நல்லா போகும் னு தான் நினைப்போமே தவிர எதிர் இருப்பவரின் படம் நல்லா போககூடாது னு நினைக்க மாட்டேன். இன்னிக்கு தான் அது ஒரு Social Media War மாறியிருக்கு..நான் என்ன சொல்ல வரேன்னா, இநு சினிமா இதை நம்பி பலர் இருக்காங்க.. எல்லோரும் எல்லா படத்தையும் பாருங்க.. தனிப்பட்ட முறையில் அவர்கள் இருவரும் வெறுப்பது இல்லையே.. மற்றவர் படத்தை பார்க்காதே என்று தன் ரசிகரிடம் யாராவது சொன்னார்களா? அப்படி யாரும் சொல்லல..‌ அப்போ எல்லோருடைய படங்களையும் பாருங்க.‌.” மேலும் விஜய் காந்த் குறித்து பேசிய சரத்குமார்,

"ரொம்ப சிறந்த நட்பு, சிறந்த உறவு அவர். என்னை அவரது புலன் விசாரணை படத்தில் மீண்டும் வில்லனாக நடிக்க வைத்து தொடர்ந்து பல படங்களில் என்னையும் சேர்த்து கொண்டு பயணித்தவர் அவர். சக கலைஞனாக இருந்தாலும் பாராட்டுதலை மறக்கமாட்டார். உதாரணமாக அவருக்கு வரும் கதையில் நான் நடித்தால் நல்லா இருக்கும் னு நினைத்து என்னிடம் அந்த கதையை திருப்பி விடுவார். இதுதான் எங்களுடைய உறவு. அதுதான் என் வளர்ச்சியை மேம்படுத்தியது” என்று பிரபல நடிகர் மற்றும் அரசியல் பிரமுகர் விஜய காந்த் அவர்களை குறித்து நெகிழ்ந்து பேசினார்.

மேலும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நமது கலாட்டா தமிழில் பகிர்ந்த பல தகவல்களை கொண்ட முழு வீடியோ இதோ..

 

விறுவிறுப்பான திரில்லர் களத்தில் ஆர்.ஜே.பாலாஜி  - மக்கள் மத்தியில் கவனம் பெரும் ரன் பேபி ரன் படத்தின் டிரைலர் இதோ..
சினிமா

விறுவிறுப்பான திரில்லர் களத்தில் ஆர்.ஜே.பாலாஜி - மக்கள் மத்தியில் கவனம் பெரும் ரன் பேபி ரன் படத்தின் டிரைலர் இதோ..

Surprise க்கு ரெடியா?..  தளபதி விஜயின் வாரிசு படக்குழுவினரின் அடுத்தகட்ட நடவடிக்கை - வைரலாகும் அறிவிப்பு இதோ..
சினிமா

Surprise க்கு ரெடியா?.. தளபதி விஜயின் வாரிசு படக்குழுவினரின் அடுத்தகட்ட நடவடிக்கை - வைரலாகும் அறிவிப்பு இதோ..

முதல் முறையாக ரஜினியுடன் நடிக்கும் பிரபல நடிகை - அடுத்தடுத்த ஜெயிலர் அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..
சினிமா

முதல் முறையாக ரஜினியுடன் நடிக்கும் பிரபல நடிகை - அடுத்தடுத்த ஜெயிலர் அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..