'ஹெலிகாப்டர் சேஸிங்..' துணிவு படத்தோட இன்னொரு கிளைமேக்ஸ் - சுப்ரீம் சுந்தர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..

அஜித்தின் துணிவு பட கிளைமேக்ஸ் குறித்து சுப்ரீம் சுந்தர் - Stunt master about alternative climax for thunivu | Galatta

வங்கி கொள்ளையை மையப்படுத்தி அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுடன் திரைக்கு வெளிவந்த திரைப்படம் ‘துணிவு’. அஜித் நடித்து எச் வினோத் இயக்கிய இப்படத்திற்கு மக்களும் ரசிகர்களும் உலகெங்கிலும் ஆதரவை அளித்து வருகின்றனர். விடுமுறை நாளையொட்டி திரைப்படம் வந்திருந்தாலும் இன்றும் பல இடங்களில் திரையரங்குகளில் கூட்டம்  நிரம்பி வழிகிறது. இந்நிலையில் படத்தில் சண்டை காட்சிகளை வடிமைத்த சுப்ரீம் சுந்தர் அவர்கள் தனது குழுவுடன் நமது கலாட்டா தமிழ் பேட்டியில் கலந்து கொண்டார். அதில் அஜித் நடித்த துணிவு படம் குறித்தும் அந்த படத்தில் வடிவமைத்த சண்டைக்காட்சிகள் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.  

அதில் துணிவு படத்தில் வேறு ஒரு கிளைமேக்ஸ் குறித்து சண்டை பயிற்சி இயக்குனர் சுப்ரீம் சுந்தர்,

"மிகப்பெரிய பட்ஜெட்டில் ஹெலிகாப்டருடன் நிறைய கார்களெல்லாம் வைத்து ஒரு பெரிய கிளைமேக்ஸ் யோசித்து வைத்தோம். அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டோம் . அந்த கிளைமேக்ஸ் படமாக்கப்பட்டிருந்தால் மிகப்பெரிய கிளைமேக்ஸ் காட்சியாக அது அமைந்திருக்கும். முதலில்  ஹெலிகாப்டரில் அவர் தப்பித்து போவது போன்ற காட்சியாக வைத்தோம். அந்த  ஹெலிகாப்டரை வில்லன்களை ஆக்ரமித்திருப்பார்கள் அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார். மற்றும் அந்த ஹெலிகாப்டர் ரோட்டில் ஒரு பஸ்ஸை கொக்கி போட்டு தூக்கும். அந்த பஸ் தொங்கியபடி ரோட்டில் இருக்கும் வாகனங்களையும் பொருட்களையும் சேதப்படுத்தும். அதிலிருந்து மக்களை எப்படி காப்பாற்றுகிறார்  என்பதே அந்த கிளைமேக்ஸாக இருந்தது. பெரிய பொருட்செலவுதான், இருந்தாலும் போனி கபூர் சார் அதற்கும் ஓகே சொல்லிவிட்டார். பின் இது படமாக்க நிறைய இடங்களில் அனுமதி கிடைக்கவில்லை. சென்னை, ஹைதராபாத்திலும் முயற்சித்தோம்.‌ கடைசியில் அது கடலில் படமாக்க வேண்டிய சூழல் ஆகிவிட்டது" என்று குறிப்பிட்டார்.

மேலும் "அஜித் சாருக்கு சிறப்பாக introduction காட்சிகளை 10 வகையில் யோசித்து வைத்தோம். கண்ணாடியை உடைத்து கொண்டு ஒருவன் உள்ளே வருவதும் அங்கிருந்து அஜித் சார் அவன் பின்னாடி நின்று தடுப்பதும் என்று நிறைய யோசித்து வைத்தோம். ஆனால் வினோத் சார் அதையெல்லாம் மறுத்துவிட்டார். சிம்பிளா அஜித் சார புக் படிக்க வெச்சிட்டாரு வினோத் சார்" என்றார்

மேலும் துணிவு படம் குறித்தும் சண்டை காட்சிகளின் உருவாக்கம் குறித்தும் துணிவு பட சண்டை காட்சிகள் வடிவமைப்பாளர் சுப்ரீம் சுந்தர் அவருடைய ஸ்டண்ட் குழுவினருடன் இணைந்து பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..  

Surprise க்கு ரெடியா?..  தளபதி விஜயின் வாரிசு படக்குழுவினரின் அடுத்தகட்ட நடவடிக்கை - வைரலாகும் அறிவிப்பு இதோ..
சினிமா

Surprise க்கு ரெடியா?.. தளபதி விஜயின் வாரிசு படக்குழுவினரின் அடுத்தகட்ட நடவடிக்கை - வைரலாகும் அறிவிப்பு இதோ..

முதல் முறையாக ரஜினியுடன் நடிக்கும் பிரபல நடிகை - அடுத்தடுத்த ஜெயிலர் அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..
சினிமா

முதல் முறையாக ரஜினியுடன் நடிக்கும் பிரபல நடிகை - அடுத்தடுத்த ஜெயிலர் அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

 விஜய் ஆண்டனிக்கு என்ன ஆனது?.. இப்போ அவர் உடல்நிலை எப்படி இருக்கு?.. – தயாரிப்பாளர் தனஞ்செயன் பகிர்ந்த தகவல் இதோ..
சினிமா

விஜய் ஆண்டனிக்கு என்ன ஆனது?.. இப்போ அவர் உடல்நிலை எப்படி இருக்கு?.. – தயாரிப்பாளர் தனஞ்செயன் பகிர்ந்த தகவல் இதோ..