ரெட் ஜெயன்ட் மூவீஸின் அடுத்த அசத்தல் ரிலீஸ்... பிக் பாஸ் கவின் டாடா பட கலக்கலான GLIMPSE வீடியோ!

பிக் பாஸ் கவினின் டாடா பட நம்ம தமிழ் ஃபோக்கு வீடியோ பாடல்,bigg boss kavin in dada movie namma tamizh folku video song | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக நல்ல நல்ல படைப்புகளை வழங்கி வரும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பல தரமான படைப்புகளை தொடர்ச்சியாக வெளியிட்டும் வருகிறது. அந்த வகையில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட இந்த ஆண்டின் பொங்கல் வெளியீடாக அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த வரிசையில் அடுத்ததாக பிக் பாஸ் போட்டியாளரும் பிரபல நடிகருமான கவின் கதாநாயகனாக நடித்துள்ள டாடா திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடிக்க, இயக்குனர் கே.பாக்கியராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் ஆகியோர் டாடா படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ஒலிம்பியா மூவீஸ் சார்பில் S.அம்பேத் குமார் தயாரித்துள்ள டாடா திரைப்படத்திற்கு எழில் அரசு.K ஒளிப்பதிவில், கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடும் டாடா திரைப்படம் இந்த 2023 ஜனவரி மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளிவந்த டாடா திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் டாடா திரைப்படத்திலிருந்து நம்ம தமிழ் ஃபோக்கு எனும் கலக்கலான வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பிக் பாஸ் கவின் உடன் இணைந்து சாண்டி மாஸ்டர் கலக்கும் அந்த வீடியோ பாடல் இதோ…
 

சேதுபதி படத்துல நல்ல போலீஸ்... இதுல எப்படி? முதல் அதிரடி வெப் சீரிஸ் குறித்து மனம்திறந்த விஜய் சேதுபதி! வீடியோ இதோ
சினிமா

சேதுபதி படத்துல நல்ல போலீஸ்... இதுல எப்படி? முதல் அதிரடி வெப் சீரிஸ் குறித்து மனம்திறந்த விஜய் சேதுபதி! வீடியோ இதோ

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மாஸான முதல் ஆக்ஷன் வெப் சீரிஸ்... அதிரடியான புது GLIMPSE இதோ!
சினிமா

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மாஸான முதல் ஆக்ஷன் வெப் சீரிஸ்... அதிரடியான புது GLIMPSE இதோ!

2023ல் ரசிகர்களுக்கு பக்கா விருந்து... இந்தியன்2, தளபதி67, AK62 படங்களின் ரிலீஸ் குறித்த அட்டகாசமான தகவல் இதோ!
சினிமா

2023ல் ரசிகர்களுக்கு பக்கா விருந்து... இந்தியன்2, தளபதி67, AK62 படங்களின் ரிலீஸ் குறித்த அட்டகாசமான தகவல் இதோ!