ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது. இரு பாகங்களாக வெளிவரவிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வனின் முன்னணி கதாபாத்திரங்களாக ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன் என்கிற பொன்னியின் செல்வன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி, குந்தவை, சுந்தர சோழர், ஆழ்வார்க்கடியான் நம்பி, பெரிய பழுவேட்டரையர், சிறிய பழுவேட்டரையர், பூங்குழலி, மதுராந்தகன், பார்த்திபேந்திர பல்லவன், கொடும்பாளூர் வேளாளர் பூதி விக்ரம கேசரி கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ரஹ்மான், விக்ரம் பிரபு, பிரபு ஆகியோர் நடித்துள்ளனர்.

தோட்டா தரணியின் கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இருந்து இதுவரை வெளிவந்த பொன்னி நதி மற்றும் சோழா சோழா பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் மற்ற பாடல்கள் வரும் செப்டம்பர் 6-ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் இசை வெளியீட்டு விழாவில் வெளியாக உள்ளன. இந்நிலையில் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இருவரும் இணைந்து பங்கேற்க உள்ளனர் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

It can’t get any bigger or better than this! Honoured to have Ulaganayagan @ikamalhaasan & Superstar @rajinikanth with us at our music and trailer launch function!#PS1 #PonniyinSelvan #CholasAreComing#ManiRatnam @arrahman @LycaProductions @Tipsofficial pic.twitter.com/qO2JJdTW5o

— Madras Talkies (@MadrasTalkies_) September 4, 2022