மலையாள திரை உலகின் மிக முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் ப்ரித்விராஜ் நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. அந்த வகையில் முதலாவதாக பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் ப்ரித்விராஜ் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள கோல்ட் திரைப்படம் அடுத்த ஆண்டு(2023) ஜனவரி மாதம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் அட்வெஞ்சர் திரைப்படமாக தயாராகி வரும் ஆடுஜீவிதம் திரைப்படத்தில் ப்ரித்தவிராஜ் நடித்து வருகிறார். ஆடுஜீவிதம் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கேஜிஎஃப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான HOMBALE FILMS தயாரிக்கும் டைசன் படத்தை இயக்கி நடிக்கவுள்ளார் ப்ரித்விராஜ்.

இந்த வரிசையில் கேஜிஎஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் சலார் திரைப்படத்தில் ப்ரித்விராஜ் முக்கிய வேடத்தில் தற்போது நடித்து வருகிறார். ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்க, ஜெகபதிபாபு, ஈஸ்வரி ராவ், ஸ்ரியா ரெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். புவன் கௌடா ஒளிப்பதிவில், ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார்.

HOMBALE FILMS நிறுவனம் தயாரிக்கும் சலார் திரைப்படம் அடுத்த ஆண்டு (2023) செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சலார் திரைப்படத்தில் வரதராஜ மன்னார் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ப்ரித்விராஜின் மிரட்டலான கேரக்டர் போஸ்டரை ப்ரித்விராஜின் பிறந்த நாளான இன்று (அக்டோபர் 16) அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டர் இதோ…
 

Birthday Wishes to the most versatile @PrithviOfficial, Presenting ‘𝐕𝐚𝐫𝐝𝐡𝐚𝐫𝐚𝐣𝐚 𝐌𝐚𝐧𝐧𝐚𝐚𝐫’ from #Salaar.#Prabhas @prashanth_neel @VKiragandur @hombalefilms @shrutihaasan @IamJagguBhai @bhuvangowda84 @RaviBasrur @anbariv @shivakumarart
#HBDPrithvirajSukumaran pic.twitter.com/tE548jFK2e

— Salaar (@SalaarTheSaga) October 16, 2022